இந்திய ரிசர்வ் வங்கியின் 2 நாள் நடைபெறும் நடப்பு நிதியாண்டின் 6வது இருமாத நாணய கொள்கை கூட்டம் வருகிற டிசம்பர் 2ஆம் தேதி துவங்கி டிசம்பர் 4ஆம் தேதி முடிய உள்ள நிலையில், நாணய கொள்கையின் முடிவுகள் இன்று வெளியாக உள்ளது.
இதன் எதிரொலியாக இன்று காலை வர்த்தகத் துவக்கத்திலேயே மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு சிறப்பான வளர்ச்சியை அடைந்ததுள்ளது.
சென்செக்ஸ்
ரிசர்வ் வங்கி நாணய கொள்கை முடிவுகளின் எதிரொலியாக வெள்ளிக்கிழமை வர்த்தகத் துவக்கத்தில் சென்செக்ஸ் குறியீடு சுமார் 330 புள்ளிகள் வரையில் உயர்ந்து அசத்தியுள்ளது. இதன் மூலம் சென்செக்ஸ் குறியீடு இன்று 44,976 புள்ளிகள் என்ற புதிய உச்சத்தை அடைந்துள்ளது.
ஆசிய சந்தைகள்
மேலும் இன்றைய வர்த்தகத்தில் சிங்கப்பூர், சீனா, தைவான், தென்கொரிய பங்குச்சந்தைகள் சிறப்பான வளர்ச்சியை அடைந்த நிலையில் இந்திய சந்தையிலும் அதிகளவிலான முதலீடு குவிந்துள்ளதன் மூலம் பெரிய அளவிலான வளர்ச்சியை அடைந்துள்ளது.
15 வருடக் குறைவான வட்டி விகிதம்
இந்தியப் பொருளாதாரம் மற்றும் வர்த்தகச் சந்தையை மேம்படுத்த ரிசர்வ் வங்கி பல முறை ரெப்போ விகிதத்தை அதிகளவில் குறைத்த நிலையில், தற்போது வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் 15 வருடக் குறைவான வட்டி அளவில் உள்ளது.
போதுமான வட்டி விகிதம்
இந்திய ரிசர்வ் வங்கி கொரோனாவால் பாதித்த இந்தியப் பொருளாதாரத்தை மேம்படுத்து பிப்ரவரி மாதம் முதல் சுமார் 115 அடிப்படை புள்ளிகள் அதாவது 1.15 சதவீதம் அளவிலான ரெப்போ விகிதத்தைக் குறைந்துள்ளது. இதனால் பொருளாதார வளர்ச்சிக்கு உந்து சக்தி சேவைப்படும் போது வட்டி விகிதத்தைக் குறைக்க முடிவு செய்துள்ளது ரிசர்வ் வங்கி.
ரீடைல் பணவீக்கம்
இந்தியாவில் தற்போது ரீடைல் பணவீக்கத்தின் அளவு 6 சதவீதத்தைத் தாண்டி 7.61 சதவீதமாக இருக்கிறது. இதைக் கட்டுப்படுத்தும் முடிவில் வர்த்தக மற்றும் பொருளாதாரத்தை நிலையிலான வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்லும் பொருட்டு வட்டி விகிதத்தைக் குறைக்கும் முடிவில் இருந்து விலகியுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது.


Click it and Unblock the Notifications