வாரத்தின் முதல் நாளான இன்று சென்செக்ஸ் குறியீடு மந்தமான வர்த்தகத்தை அதாவது வெறும் 81 புள்ளிகள் மட்டுமே உயர்ந்து காணப்பட்டாலும் 31,241.39 என்ற புதிய உச்சத்தை அடைந்தது.
இன்று வர்த்தகத் துவக்கத்தில் சரிவைக் கண்டு சென்செக்ஸ் சில நிமிடங்களில் லாபகரமான நிலைக்கு உயர்ந்தாலும், தொர்ந்து மந்தமான வர்த்தகத்தை மட்டுமே பெற்றுச் சென்செக்ஸ்.

இந்நிலையில் இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 81.07 புள்ளிகள் உயர்ந்து 31,108.28 புள்ளிகளை அடைந்து இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது.
அதேபோல் நிஃப்டி குறியீடு வெறும் 9.80 புள்ளிகள் உயர்ந்து 9,604.90 புள்ளிகளை அடைந்து திங்கட்கிழமை வர்த்தகம் முடிவடைந்தது.
மேலும் இன்றைய வர்த்தகத்தில் சன் பார்மா, அதானி போர்ட்ஸ், ஐசிஐசிஐ வங்கி, எஸ்பிஐ, இன்போசிஸ், ஆக்சிஸ் வங்கி, விப்ரோ, டாடா ஸ்டீல் ஆகியவை சரிவை சந்தித்தது.


Click it and Unblock the Notifications