சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 7 சதவீதம் வரை சரிந்தது, டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு உயர்வு, அமெரிக்க - சீனா இடையிலான வர்த்தகப் போர் குறித்த பேச்சு வார்த்தை போன்ற காரணங்களால் இந்திய பங்கு சந்தை இன்று புதிய சாதனைப் படைத்துள்ளது.
அமெரிக்கா - சீனா இடையிலான வர்த்தகப் போர் மீதான தாக்கத்தினால் புதன்கிழமை பிளாட்டாக முடிந்த பங்குச்சந்தையின் இன்றைய நிலவரத்தினை இங்குப் பார்ப்போம்.
இன்றைய பங்குச்சந்தை நிலவரம்
மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் 282.48 புள்ளிகள் என 0.78 சதவீதம் உயர்ந்து 36,548.41 புள்ளியாக வர்த்தகம் ஆனது. அதே நேரம் தேசிய பங்கு சந்தை குறியீடான நிப்டி 74.90 புள்ளிகள் என 0.68 சதவீதம் உயர்ந்து 11,023.20 புள்ளிகளாக வர்த்தகமானது.
துறை வாரியான நிலவரம்
மும்பை பங்கு சந்தையினைப் பொறுத்தவரையில் எண்ணெய் மற்றும் எரிவாயு, வங்கி, கேப்பிட்டல் கூட்ஸ் மற்றும் பொதுத் துறை நிறுவனப் பங்குகள் அதிகம் வாங்கப்பட்ட நிலையில், ரியாலிட்டி, ஆட்டோ மொபைல், டேக், ஐடி நிறுவன பங்குகள் விற்பனையில் சிக்கிக்கொண்டன.
ரிலையன்ஸ் நிறுவனம்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் 10 வருட இடைவேலைக்குப் பிறகு மீண்டும் 100 பில்லியன் டாலர் சந்தை மூலதனம் பெற்ற நிறுவனம் என்ற நிலையினை அடைந்துள்ளது. சில மாதங்களுக்கு முன்பி 100 பில்லியன் டாலர் சந்தை மூலதனத்தினை டிசிஎஸ் நிறுவனமும் பெற்றது குறிப்பிடத்தக்கது.
லாபம் அளித்த நிறுவனங்கள்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், விப்ரோ, எல்&டி, எச்டிஎப்சி, எஸ்பிஐ, இந்துஸ்தான் யூனிலீவர் பங்குகள் லாபம் அளித்தன.
நட்டம் அளித்த நிறுவனங்கள்
அதானி போர்ட்ஸ் , ஹீரோ மோட்டோ கார்ப், மஹிந்தரா & மஹிந்தரா, பஜாஜ் ஆட்டோ, இன்போசிஸ், வேதாந்தா நிறுவன பங்குகள் நட்டத்தினை அளித்துள்ளன.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications