2 வருடச் சரிவில் தத்தளிக்கும் மும்பை பங்குச்சந்தை.. என்ன காரணம்..?

பங்குச்சந்தை உயர்வு.. சென்செக்ஸ் சரிவு.. பொருளாதாரம் மீட்டு அடைந்து வருகிறது.. என்று கடந்த 3 மாத காலமாக இந்திய பங்குச்சந்தையில் தினசரி அதிரிபுதிரி தான். பலரும் பல தரப்பினரும் இந்திய பங்குச்சந்தை உயர்வான நிலையில் உள்ளது என்று கூறிவரும் நிலையில் இதன் உண்மை நிலையை உரைக்கும் கட்டுரை தான் இது.

இந்திய பங்குச்சந்தை கடந்த 3 மாதங்களாகப் பல ஏற்ற இறக்கத்தைச் சந்தித்துத் தற்போது மீண்டுள்ளது என்று நம்பும் அனைவரும், தெரிந்துக்கொள்ள வேண்டி ஒன்று.

2 வருடச் சரிவில் தத்தளிக்கும் மும்பை பங்குச்சந்தை.. என்ன காரணம்..?

இந்திய பங்குச்சந்தை இன்னும் 2014ஆம் ஆண்டின் செப்டம்பர் மாத துவக்க நிலையிலேயே உள்ளது. அதாவது 2 வருடத்திற்கு முந்தைய நிலையில் உள்ளது.

வெள்ளிக்கிழமை (06-01-2017) வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 26,759.23 புள்ளிகளில் முடிவடைந்தது. அதேபோல் 2014ஆம் ஆண்டுச் செப்டம்பர் 1ஆம் தேதியன்று 26,867.65 புள்ளிகளை அடைந்திருந்தது.

2 வருடச் சரிவில் தத்தளிக்கும் மும்பை பங்குச்சந்தை.. என்ன காரணம்..?

இதில் நல்ல விஷயம் என்வென்றால் இந்திய பங்குச்சந்தையில் இருக்கும் நிறுவனங்களின் பங்குகளின் விலை 2 வருடச் சரிவை அடைவில்லை என்பது தான்.

இந்த மிகப்பெரிய சரிவிற்கு முக்கியக் காரணமாக விளங்கியது. அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி மற்றும் 500 மற்றும் 1000 ரூபாய் தடை என்பது தற்போது உறுதியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்திய சந்தையில் நிலவும் பதற்றமான நிலையின் காரணமாக அன்னிய முதலீட்டாளர்கள் இந்திய சந்தையில் செய்த முதலீட்டைத் தொடர்ந்து குறைத்து வந்தது 2 வருடச் சரிவிற்கு முக்கியக் காரணமாக அமைந்தது.

2 வருடச் சரிவில் தத்தளிக்கும் மும்பை பங்குச்சந்தை.. என்ன காரணம்..?

அன்னிய முதலீட்டாளர்கள் தங்களது முதலீட்டைக் குறைத்ததற்கு மற்றொரு காரணம் அமெரிக்கப் பெடரல் வங்கி தனது வட்டி விகித்தை உயர்த்தியது.

மேலும் ஜனவரி மாதத்தில் மும்பை பங்குச்சந்தை மேலும் சில நூறு புள்ளிகளை இலக்க வாய்ப்புகள் உண்டு.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+