இந்திய பங்கு சந்தையானது இன்று பலத்த ஏற்றத்தினை கண்டுள்ள நிலையில், சென்செக்ஸ் 58,100 என்ற லெவலிலும், நிஃப்டி 17,280 என்ற லெவலிலும் ஏற்றம் கண்டுள்ளது.
இன்று அனைத்து துறை சார்ந்த குறியீடுகளும் ஏற்றம் கண்டுள்ளன. இதில் வங்கித்துறை, கேப்பிட்டல் குட்ஸ், மெட்டல்ஸ், ஐடி பங்குகள் என்பது இன்று சிறந்த ஃபெர்பார்மர்களாக இருந்தன.
மிட் கேப், ஸ்மால் கேப் இன்டெக்ஸ்களும் நல்ல ஏற்றம் கண்டுள்ளது.
அன்னிய முதலீடு
சர்வதேச சந்தையில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில், இந்திய சந்தையானது கடந்த சில தினங்களாகவே தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகின்றது. கடந்த சில தினங்களாக மட்டும் அல்ல, நடப்பு நிதியாண்டின் இரண்டாம் காலாண்டிலும் மொத்தமாக பார்க்கும்போது நல்ல ஏற்றம் கண்டுள்ளது. இதற்கிடையில் டாலருக்கு எதிரான இந்திய கரன்சியானது ஏற்றம் காணத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் இந்திய சந்தையில் அன்னிய முதலீடும் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
உற்பத்தி குறைக்கப்படுமா?
கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உச்சத்திலேயே இருந்து வருகின்றது. இதற்கிடையில் வரவிருக்கும் ஒபெக் கூட்டத்திலும் உற்பத்தியானது குறைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக கச்சா எண்ணெய் விலையானது மீண்டும் உச்சத்தில் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரே நாளில் இவ்வளவா?
இதற்கிடையில் இந்திய சந்தையில் இன்று ஏற்றம் கண்ட நிலையில், இன்று ஒரே நாளில் முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பு 5.66 லட்சம் கோடி ரூபாய் அதிகரித்துள்ளது.
இன்றைய நிலவரம்?
இன்று இந்திய பங்கு சந்தையில் சென்செக்ஸ் 1276.66 புள்ளிகள் அல்லது 2.25% ஏற்றம் கண்டு, 58,065.47 புள்ளிகளாக முடிவடைந்துள்ளது. இது இன்று 58,099.94 புள்ளிகள் வரையில் இன்று உச்சம் எட்டியுள்ளது.
இதே நிஃப்டி 50 ஆனது 386.95 புள்ளிகள் அதிகரித்து அல்லது 2.29% அதிகரித்து, 17,274.30 புள்ளிகளாக முடிவடைந்துள்ளது. இதன் உச்சம் 17,287.30 புள்ளிகளாகவும் உச்சம் எட்டியுள்ளது.
ரூபாய் மதிப்பு
இதற்கிடையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது, வலுவான ஏற்றம் கண்டுள்ளது. இது பத்திர சந்தையும் ஏற்றம் கண்டுள்ளது. இதே ரூபாயின் மதிப்பானது, 81.52 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இது கடந்த அமர்வின் 81.87 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்



Click it and Unblock the Notifications