சென்செக்ஸ் 100 புள்ளிகள் உயர்வு..! நிப்டி 8,900 புள்ளிகளைத் தொட்டது..!

Sensex, Nifty, stock market, சென்செக்ஸ், நிப்டி, பங்குச் சந்தை

நுகர்வோர் சாதனங்கள், வங்கி, எண்ணெய் மற்றும் எரிவாயு, பொதுத்துறை நிறுவனம் பங்குகள் இன்று உயர்ந்ததை அடுத்துச் செவ்வாய்க்கிழமை சென்செக்ஸ் மற்றும் நிப்டி 0.3 சதவீதம் உயர்ந்தன.

மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் 100.001 புள்ளிகள் அதாவது 0.35 சதவீதம் உயர்ந்து 28,761.59 புள்ளிகளாக வர்த்தகம் ஆனது. இதுவே தேசிய பங்குச் சந்தையான நிப்டி 28.65 புள்ளிகள் அதாவது 0.32 சதவீதம் உயர்ந்து 8,907.85 புள்ளிகளைத் தொட்டது.

மும்பை பங்குச் சந்தை

மும்பை பங்குச் சந்தை

மும்பை பங்குச் சந்தையைப் பொறுத்த வரை இன்று ரேமண்ட் 13.41 சதவீதமும், ஜிண்டால் பவர் 9.23 சதவீதமும், மான்சாண்டோ இந்தியா 7.67 சதவீதமும், ஜெட் ஏர்வேஸ் 7.38 சதவீதமும், இந்தியா சிமெண்ட்ஸ் 8.81 சதவீதமும் உயர்ந்தன.

தேசிய பங்குச் சந்தை

தேசிய பங்குச் சந்தை

தேசிய பங்குச் சந்தையைப் பொருத்த வரை ஆக்ஸிஸ் வங்கி 4.54 சதவீதமும், ஆரோபிந்தோ பார்மா 2.49 சதவீதமும், ஏசியன் பெயிண்ட்ஸ் 1.61 சதவீதமும், டெக் மகேந்திரா 1.59 சதவீதமும், YES பாங்க் லிமிடெட் 1.49 சதவீதமும் உயர்ந்து வர்த்தகம் ஆனது.

ஜியோ அறிவிப்பு

ஜியோ அறிவிப்பு

டெலிகாம் நிறுவனங்களின் பங்குகள் இன்று சரிவை சந்தித்த போதிலும் இன்று ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் 100 மில்லியன் வாடிக்கையாளர்கள் அறிவிப்பால் 1.24 சதவீதம் உயர்வைச் சந்தித்தது.

பார்தி ஏர்டெல் 2.4 சதவீதம் சரிந்தும், ஐடியா நிறுவனம் 0.2 சதவீதம் சரிந்து வார்த்தகம் ஆனது.

 

டெக் மகேந்திரா

டெக் மகேந்திரா

இன்று டெக் நிறுவனப் பங்குகளில் டிசிஎஸ் நிறுவனம் 0.3 சதவீதம் சரிவை சந்தித்த போதிலும், டெக் மகேந்திரா 1.9 சதவீதமும், எச்சிஎல் நிறுவனப் பங்குகள் 1.4 சதவீதம் உயர்ந்தும் வர்த்தகம் செய்யப்பட்டன.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+