ஜிஎஸ்டி அமலாக்கம் செய்யப்பட்ட பின்பு மும்பை பங்குச்சந்தையில் உள்நாட்டு மட்டும் அன்னிய முதலீட்டாளர்கள் அதிகளவில் முதலீடு செய்து வருகின்றனர், இதனால் தொடர் வளர்ச்சி பாதையில் உள்ளது.
இன்றைய வர்த்தகத்தில், கடந்த சில வாரங்களாக சரிவை சந்தித்த ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா இன்று உயர்வடைந்து உள்ளது.
மும்பை பங்குச்சந்தை
வியாழக்கிழமை வர்த்தக துவக்கத்தில் மளமளவென உயர்ந்த நிலையில், வர்த்தக முடிவில் சற்று சரிவை சந்தித்தது. மேலும் ஐரோப்பிய சந்தையின் வர்த்தக துவக்கத்தில் சென்செக்ஸ் குறியீடு சுமார் 200 புள்ளிகள் வரை உயர்ந்தது.
சென்செக்ஸ்
இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 123.78 புள்ளிகள் உயர்ந்து 31,369.34 புள்ளிகளை அடைந்துள்ளது.
நிஃப்டி
சென்செக்ஸ் குறியீட்டை போலவே நிஃப்டி குறியீடு வர்த்தக முடிவை சரிவை சந்தித்தாலும், உயர்வுடன் வர்த்தகம் முடிவடைந்தது.
இதன் படி நிஃப்டி குறியீடு 36.95 புள்ளிகள் உயர்வில் 9,674.55 புள்ளிகளை அடைந்தது.
முக்கிய நிறுவனங்கள்
இன்றைய வர்த்தகத்தில் எஸ்பிஐ, ஐடிசி, கோல் இந்தியா, பார்தி ஏர்டெல். மாருதி ஆகிய நிறுவனங்கள் 1.36 சதவீத்திற்கும் அதிகமாக உயர்ந்தது. அதேபோல் பஜாஜ் ஆட்டோ, மஹிந்திரா, சன் பார்மா, ஆக்சிஸ் வங்கி ஆகியவை சரிவை சந்தித்தது.


Click it and Unblock the Notifications