ஜிஎஸ்டி கவுன்சில் கார்கள் மீதான வரி விதிப்பை மாற்றியதன் மூலம் இன்றைய வர்த்தகத்தில் ஆட்டோமொபைல் நிறுவனங்களின் பங்குகள் அதிகளவிலான வர்த்தக உயர்வை சந்தித்தது. இதனால் ஆகஸ்ட் 7ஆம் தேதி வர்த்தகத்திற்கு பின் இன்றைய வர்த்தகத்தில் அதிகளவிலான உயர்வை ஆட்டோமொபைல் நிறுவனங்கள் பெற்றுள்ளது.
ஐஐபி மற்றும் பணநீக்கம்
செவ்வாய்க்கிழமை ஜூலை மாதத்திற்கான தொழிற்துறை உற்பத்தி தகவல் மற்றும் ஆகஸ்ட் மாதத்திற்கான பணவீக்கம் குறித்த தரவுகள் வெளியாகுவதால், இன்று மும்பை பங்குச்சந்தையில் அதிகளவிலான முதலீடு செய்யப்பட்டது.
ஆசிய சந்தைக்கு வாய்ப்பு
இர்மா புயல் மற்றும் வட கொரியா அச்சுறுத்தல்களின் காரணமாக திங்கட்கிழமை வர்த்தகத்தில் ஆசிய மற்றும் ஐரோப்பிய சந்தையில் அதிகளவிலான வர்த்தகமும், முதலீடும் செய்யப்பட்டது.
இதன் எதிரொலியாக இன்று மும்பை பங்குச்சந்தையில் அதிகளவிலான முதலீடு செய்யப்பட்டு சென்செக்ஸ் உயர்வடைந்தது.
சென்செக்ஸ்
இன்றைய வர்த்தகம் துவக்கம் முதலே உயர்வை சந்தித்த சென்செக்ஸ் குறியீடு ஐரோப்பிய சந்தையின் துவக்கத்தில் கூடுதலான உயர்வை சந்தித்து. இதன் மூலம் திங்கட்கிழமை வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 194.64 புள்ளிகள் உயர்ந்து 31,882.16 புள்ளிகளை அடைந்தது.
நிஃப்டி குறியீடு
சென்செக்ஸ் குறியீட்டை போல் தொடர் வர்த்தக உயர்வில் இருந்த நிஃப்டி குறியீடு 71.25 புள்ளிகள் உயர்ந்து 10,006.05 புள்ளிகளை அடைந்தது.
முக்கிய நிறுவனங்கள்
இன்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் எஸ் அண்ட் பி குறியீட்டின் கீழ் இருக்கும் 30 நிறுவனங்களில் இன்றைய வர்த்தகத்தில் மஹிந்திரா, இன்போசிஸ், சன் பார்மா, எஸ்பிஐ, ஐசிஐசிஐ வங்கி, ஹீரோ மோட்டோ கார்ப், பார்தி ஏர்செல், டிசிஎஸ் ஆகிய நிறுவனங்கள் சரிவை சந்தித்தது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications