நேற்றைய வர்த்தகத்தில் பெரிய அளவிலான சரிவை சந்தித்த மும்பை பங்குச்சந்தை இன்று புதிய முதலீடுகளாலும், இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனத்தின் லாபகரமான காலாண்டு முடிவுகள் இந்திய பங்குச்சந்தையை மீண்டும் இயல்பு நிலைக்கு திருப்பியது.
முக்கிய துறைகள்
இதன் காரணமாக இன்று மும்பை பங்குச்சந்தை வர்த்தகத்தில் எப்எம்ஜிசி, ஹெல்த்கேர், வங்கி, ஐடி, பொதுத்துறை நிறுவனங்கள், எண்ணெய் மற்றும் எரிவாயு துறைகள் 1.13 சதவீதம் வரை உயர்ந்தது.
32,000 புள்ளிகள்
புதன்கிழமை வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு நேற்றைய இழப்பீட்டை முழுமையாக தீர்க்கவில்லை என்றாலும், 32,000 புள்ளிகளை நெருங்கியது.
சென்செக்ஸ்
இதன் படி, இன்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 244.36 புள்ளிகள் உயர்ந்து 31,955.35 புள்ளிகளை அடைந்தது.
நிஃப்டி
சென்செக்ஸ் குறியீட்டை போல் நிலையான வர்த்தகத்தை பெற்ற நிஃப்டி குறியீடு 72.45 புள்ளிகள் உயர்ந்து 9,899.60 புள்ளிகளை எட்டி புதன்கிழமை வர்த்தகம் முடிவடைந்தது.
லாபமடைந்த நிறுவனங்கள்
இன்றைய வர்த்தகத்தின் மும்பை பங்குச்சந்தையின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில், பார்தி ஏர்டெல், கோல் இந்தியா, ஐடிசி, டாக்டர் ரெட்டி, டிசிஎஸ், சன் பார்மா, கோட்டாக் மஹிந்திரா வங்கி.
நஷ்டமடைந்த நிறுவனங்கள்
அதேபோல் ஐசிஐசிஐ வங்கி, எச்டிஎப்சி, அதானி போர்ட்ஸ், இந்துஸ்தான் யுனிலீவர், ஹீரோ மோட்டோ கார்ப், இன்போசிஸ்.


Click it and Unblock the Notifications