பல்வேறு காரணங்களுக்காகச் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை சுமார் 5 டாலர் வரையில் குறைந்துள்ளது.
இதன் எதிரொலியாகப் பங்குச்சந்தையில் முதலீட்டு அளவுகள் தொடர்ந்து அதிகரித்து வண்ணம் உள்ளது. இதனால் கடந்த 3 நாட்களாகச் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு தொடர்ந்து உயர்வில் உள்ளது.
ரூபாய் மதிப்பு
கச்சா எண்ணெய் விலை போலவே அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பும் தற்போது உயர்வடைந்துள்ளதால் இந்திய சந்தையில் அன்னிய முதலீட்டு அளவுகள் கணிசமாக உயர்ந்துள்ளது.
மும்பை பங்குச்சந்தை
இன்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 240.61 புள்ளிகள் உயர்ந்து 35,165.48 புள்ளிகளை அடைந்துள்ளது, அதேபோல் நிஃப்டி குறியீடு 83.50 புள்ளிகள் உயர்ந்து 10,688.65 புள்ளிகளை எட்டி இன்றைய வர்த்தகம் முடிவடைந்துள்ளது.
முக்கிய நிறுவனங்கள்
திங்கட்கிழமை வர்த்தகத்தில் சன் பார்மா, கோல் இந்தியா, எல் அண்ட் டி, ஏசியன் பெயின்ட்ஸ், எஸ்பிஐ, மாருதி சுசூகி ஆகிய நிறுவனங்கள் அதிகளவிலான வளர்ச்சியை அடைந்துள்ளது.
வேதாந்தா
இன்றைய வர்த்தகத்தில் வேதாந்தா நிறுவன பங்குகள் வெறும் 0.68 சதவீதம் மட்டுமே உயர்ந்து 253.50 ரூபாய் அளவில் வர்த்தகம் செய்யப்படுகிறது.


Click it and Unblock the Notifications