அமெரிக்கப் பெடரல் ரிசர்வ் தனது வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் வரையில் உயர்த்திய காரணத்தால் இன்றைய வர்த்தகம் சந்தை மந்தமான வர்த்தகத்தை மட்டுமே பதிவு செய்தது. ஆனால் ஐரோப்பிய சந்தையின் துவக்கத்தில் முதலீட்டு அளவு கணிசமாக உயர்ந்து சென்செக்ஸ் குறியீடு 210 புள்ளிகள் வரையில் உயர்ந்தது.
அமெரிக்கா
பெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை உயர்த்தியதன் மூலம் இந்நாட்டின் வேலைவாய்ப்பு சந்தை மற்றும் பொருளாதார அளவீடுகள் உயரும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
ஆசிய சந்தை
இதன்மூலம் அடுத்தச் சில மாதங்களுக்கு இந்திய மற்றும் ஆசிய சந்தையில் இருக்கும் முதலீடுகள் அமெரிக்காவிற்குச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்திய பங்குச்சந்தையில் மீதான வர்த்தகத்தை மட்டுமே எதிர்பார்க்க முடியும்.
ரூபாய் மதிப்பு
அமெரிக்கச் சந்தையில் முதலீட்டு அளவுகள் அதிகரிக்கும் பட்சத்தில், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 66 ரூபாய் வரையில் உயர்வும் எனக் கணிக்கப்படுகிறது.
சென்செக்ஸ்
இன்றைய வர்த்தகத்தை ஐரோப்பிய சந்தை காப்பாற்றியுள்ள நிலையில், மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்றைய வர்த்தக முடிவில் 193.66 புள்ளிகள் உயர்ந்து 33,246.70 புள்ளிகளை அடைந்துள்ளது.
நிஃப்டி
சென்செக்ஸ் குறியீட்டை போல் ஐரோப்பிய சந்தையின் முதலீடுகளால் நிஃப்டி குறியீடு 59.15 புள்ளிகள் உயர்ந்து 10,252.10 புள்ளிகள் உயர்ந்து இன்றைய வர்த்தகம் முடிவடைந்துள்ளது.


Click it and Unblock the Notifications