சரிவில் இருந்து மீண்ட சென்செக்ஸ்.. இன்று அதிக லாபம் கொடுத்த 2 துறைகள் இதுதான்..!!

இந்திய பங்குச் சந்தையின் முக்கிய குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடுகள் சர்வதேச சந்தை தாக்கத்தால் ஆகஸ்ட் 5ஆம் தேதி அன்று கிட்டத்தட்ட 3 சதவீதம் வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து, இன்று காலையில் வர்த்தகம் துவங்கும் போதே வலுவாக ஆரம்பித்தது. ஆனால் நிஃப்டி மற்றும் சென்செக்ஸ் குறியீடு ஆரம்பக்கட்டத்தில் பதிவு செய்த லாபத்தில் சிலவற்றை தற்போது இழந்தாலும் தொடர்ந்து லாபகரமாகவே உள்ளது முதலீட்டாளர்களுக்கு குட்நியூஸ் ஆக உள்ளது. இதன் வாயிலாக நேற்று பெரும் இழப்பைச் சந்தித்த முதலீட்டாளர்களுக்குத் தற்காலிக நிம்மதியை அளித்துள்ளது.

சென்செக்ஸ் குறியீடு காலை வர்த்தகத்தில் கிட்டத்தட்ட 900 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து 79,852.08 என்ற உயர்வைத் தொட்டது, ஆனால் தற்போது 400 புள்ளிகள் உயர்வில் 79,160.38 ரூபாயாக உள்ளது. மேலும் நிஃப்டி குறியீடு 131.30 புள்ளிகள் உயர்ந்து 24,186.90 புள்ளிகளில் வர்த்தகமாகி வரும் வேளையில் அதிகப்படியாக 24,382.60 புள்ளிகளைத் தொட்டது.

சரிவில் இருந்து மீண்ட சென்செக்ஸ்.. இன்று அதிக லாபம் கொடுத்த 2 துறைகள் இதுதான்..!!

இன்றைய வர்த்தகத்தில் மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகள்1.2 மற்றும் 1.4 சதவீதம் வரையில் அதிகரித்துள்ளது. 2024 ஆண்டு தொடக்கத்திலிருந்து, இரண்டும் குறியீடுகளும் சுமார் 21 சதவிகிதம் வரை அதிகரித்துள்ளன, இது நிஃப்டி குறியீட்டின் 13.3 சதவீத உயர்வைக் காட்டிலும் அதிகமாகும். இன்றைய வர்த்தகத்தில் மிகவும் முக்கியமாகப் பார்க்க வேண்டியது இந்தியா VIX குறியீடு சுமார் 11 சதவீதம் சரிந்து 18 புள்ளிகள் அளவில் உள்ளது.

இன்றைய பங்குச்சந்தை வர்த்தகத்தில் துறைவாரியாகப் பார்க்கும் போது, நிஃப்டி மெட்டல் மற்றும் ரியால்டி குறியீடுகள் அதிகப்படியான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. அதானி எண்டர்பிரைசஸ், JSW ஸ்டீல், டாடா ஸ்டீல் மற்றும் ஹினால்கோ பங்குகள் அதிகப்படியான லாபத்தை எட்டியுள்ளது.

நிஃப்டி ஆட்டோ முதலீட்டாளர்கள் இன்று லாபத்தைப் பதிவு செய்ய முடிவு செய்த காரணத்தால், இத்துறையில் இருக்கும் பெரும்பாலான பங்குகளைக் குறைந்த அளவிலான லாபத்தைப் பதிவு செய்து ஒரு சதவிகிதத்திற்கும் குறைவான உயர்வைப் பதிவு செய்துள்ளது. நிஃப்டி வங்கி கிட்டத்தட்ட மந்தநிலையில் வர்த்தகமாகி வெறும் 0.1 சதவிகிதம் அதிகரித்ததுள்ளது.

பிரிகேட் எண்டர்பிரைசஸ்: பெங்களூரு தலைமையிடமாகக் கொண்ட ரியல் எஸ்டேட் நிறுவனமான பிரிகேட் எண்டர்பிரைசஸ் 2025ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் (Q1FY25) லாப அளவுகள் வருடாந்திர அளவில் நான்கு மடங்கு அதிகரித்து ரூ.81 கோடி என அறிக்கை வெளியிட்டதைத் தொடர்ந்து இதன் பங்குகள் இன்றைய வர்த்தகத்தில் 6 சதவிகிதம் உயர்ந்தன.

வி-மார்ட் ரீடைல்: இந்தியாவின் மாபெரும் ரீடைல் சந்தையில் இருக்கும் முன்னணி நிறுவனமாக இருக்கும் வி-மார்ட் ரீடைல் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் வருவாய் எதிர்பார்ப்புகளை விட அதிகமாக இருந்ததைத் தொடர்ந்து இதன் பங்குகள் 14 சதவிகிதத்திற்கும் அதிகமாக உயர்ந்து புதிய 52 வார உச்சத்தை எட்டியது. கடந்த ஆண்டு இதே காலாண்டில் ரூ.22 கோடி இழப்பைப் பதிவு செய்ததைத் தொடர்ந்து, ஜூன் காலாண்டில் ரூ.12 கோடி நிகர லாபம் பதிவு செய்தது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+