சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு இந்த வாரம் முதல் இரண்டு நாட்களில் வீழ்ச்சியைக் கண்ட நிலையில், இன்று புதன்கிழமை (ஆகஸ்ட் 7) மிகப்பெரிய முன்னேற்றத்தைக் கண்டது. உலகளாவிய பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட வளர்ச்சியின் காரணமாக இந்தியப் பங்குச்சந்தையும் உயர்ந்துள்ளது. ஆனால் இந்த ஏற்றத்திற்கு 5 முக்கிய காரணங்கள் உள்ளது.
BSE சென்செக்ஸ் குறியீடு அதிகப்படியாக 1046 புள்ளிகள் உயர்ந்து 79,639 புள்ளிகளை எட்டியது. NSE நிஃப்டி 346 புள்ளிகள் உயர்ந்து 24,338 புள்ளிகளை எட்டியது. நிஃப்டி மிட் கேப் மற்றும் சிறு கேப் குறியீடுகள் தலா 1.7 சதவிகிதம் உயர்ந்து பங்குச்சந்தை முதலீட்டாளர்களைச் சரிவில் இருந்து மீட்டுக்கொண்டு வந்துள்ளது. இந்த நிலையில் இன்றைய பங்குச்சந்தை ஏற்றத்திற்கான 5 முக்கிய காரணங்களை இப்போது பார்ப்போம்.

ஜப்பான் வங்கியின் அறிக்கை: சர்வதேச அளவில் பங்குச்சந்தை சரிய முக்கியமான காரணமாக இருந்தது ஜப்பான் நாட்டின் பென்ச்மார்க் வங்கி விகித உயர்வு தான். இந்த நிலையில் ஜப்பான் மத்திய வங்கியின் துணை ஆளுநர் ஷினிச்சி உச்சிடா, சந்தை நிலையற்ற தன்மை நிலவும் போது வட்டி விகிதத்தை உயர்த்த மாட்டோம் என்று முதலீட்டாளர்களுக்கு உறுதியளித்தார்.
இது சர்வதேச முதலீட்டாளர்களுக்குப் பெரிய அளவிலான நம்பிக்கையைக் கொடுத்துள்ளது. இதேபோல் இந்த வட்டி விகிதம் உயர்வு மூலம் ஏற்பட்ட முதலீட்டுச் சந்தையின் தடுமாற்றத்தை மனதில் வைத்து அடுத்த வட்டி விகித மாற்றும் இருக்கும் எனவும் தெரிவித்தார்.
ஆசிய சந்தைகள் உறுதிப்படுத்தல்: பேங்க் ஆப் ஜப்பான் துணை ஆளுநர் ஷினிச்சி உச்சிடா-வின் உத்தரவாதத்தை அடிப்படையாகக் கொண்டு ஆசிய சந்தைகள் உயர்ந்தது. ஜப்பானின் நிக்கி 2 சதவிகிதத்திற்கும் அதிகமாக உயர்ந்தது. தென் கொரியாவின் கோஸ்பி 1.7 சதவிகிதம், ஹாங்காங்கின் ஹாங் செங் 1.7 சதவிகிதம், ஆஸ்திரேலியாவின் ASX20 0.4 சதவிகிதம் மற்றும் சீனாவின் ஷாங்காய் காம்போசிட் 0.3 சதவிகிதம் உயர்ந்தது.
யென் பலவீனம்: டாலருக்கு எதிராக ஜப்பானிய யென் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவது சர்வதேச முதலீட்டு சந்தைக்குச் சாதகமான விஷயமாக உள்ளது. ஜப்பான் யென் இன்று 2 சதவிகிதத்திற்கும் அதிகமாகச் சரிந்து, பின்னர் ஆசிய வர்த்தகத்தில் 1.6 சதவிகிதம் சரிந்து 146.69 இல் வர்த்தகம் செய்யப்பட்டது.
அமெரிக்கப் பங்குச் சந்தைகளில் நேர்மறை: அமெரிக்கப் பங்குச் சந்தை மூன்று நாள் வீழ்ச்சியைத் தொடர்ந்து வியாழக்கிழமை உயர்ந்தது. எஸ்&பி 500 க்கு இணைக்கப்பட்ட பியூச்சர்ஸ் 0.68 சதவிகிதம் உயர்ந்தது, நாஸ்டாக் 100 பியூச்சர்ஸ் 1.1 சதவிகிதம் அதிகரித்தது மற்றும் டாவ் ஜோன்ஸ் தொழில்துறை சராசரி பியூச்சர்ஸ் சுமார் 0.6 சதவிகிதம் உயர்ந்தது. நேற்று இரவு அமெரிக்க வர்த்தகத்தில் டாவ் ஜோன்ஸ் 0.76 சதவிகிதம், எஸ்&பி 500 1.04 சதவிகிதம் மற்றும் நாஸ்டாக் கலவை 1.03 சதவிகிதம் உயர்ந்தது.
மத்திய கிழக்கு பதற்றத்தில் உடனடி அதிகரிப்பு இல்லை: ஈரான் மற்றும் இஸ்ரேல் மத்தியிலான மோதல்கள் உட்பட மத்திய கிழக்கில் தொடர்ந்து பதற்றம் நிலவி வந்தாலும், ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டதிலிருந்து இஸ்ரேலில் புதிய தாக்குதல்கள் எதுவும் நடக்கவில்லை.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications