மும்பை பங்குச்சந்தையில் வாரத்தின் முதல் நாளான இன்று மிகப்பெரிய சரிவை பதிவு செய்துள்ளது. வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் 59,135.13 புள்ளிகள் உடன் முடிந்த நிலையில் இன்று 58,094.55 புள்ளிகள் வரையில் சரிந்து வர்த்தக முடிவில் 58,237 புள்ளிகள் உடன் முடிந்தது.
கடந்த 3 நாள் வர்த்தகத்தில் மட்டும் சென்செக்ஸ் சுமார் 2110 புள்ளிகளை இழந்து முதலீட்டாளர்களின் முதலீட்டு மதிப்பு சுமார் 7.3 லட்சம் கோடி ரூபாய் அளவிலான சரிவை சந்தித்துள்ளது. திங்கட்கிழமை சந்தை வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீட்டின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் டெக் மஹிந்திரா பங்குகள் மட்டும் 6.83 சதவீத உயர்வுடன் இருந்தது. மற்ற 29 நிறுவனங்களும் சரிவடைந்தது.
இந்த மாபெறும் சரிவுக்கு என்ன காரணம்..?! இந்த 3 நாள் வர்த்தகத்தில் வங்கி பங்குகள் அதிகளவிலான சரிவை பதிவு செய்தது. இது மட்டும் அல்லாமல் இந்தியா VIX குறியீடு 20 சதவீதம் வரையில் உயர்ந்தது. நிஃப்டி சந்தையில் ஸ்மால் கேப் மிட் கேப் பங்குகள் அதிகளவிலான சரிவை பதிவு செய்தது.
சிலிக்கான் வேலி பேங்க்
சிலிக்கான் வேலி பேங்க் வீழ்ச்சியை அமெரிக்க அரசு சரியான நேரத்தில் நுழைந்து காப்பாற்றினாலும் இதன் தாக்கம் கட்டாயம் குறையவில்லை என்று தான் சொல்ல வேண்டும். இதன் எதிரொலியாக இன்று ஆசிய சந்தை மொத்தமும் பெரும் சரிவை எதிர்கொண்டு உள்ளது.
சிலிக்கான் வேலி பேங்க்-ஐ தொடர்ந்து நியூயார்க் சிக்னேச்சர் பேங்க்-ம் திவாலாகியுள்ளது. இந்த வங்கி FTX வீழ்ச்சியின் காரணமாக வீழ்ந்துள்ளது, இவ்வங்கிக்கு அமெரிக்க பெடரல் ரிசர்வ் எவ்விதமான தீர்வும் இதுவரையில் எட்டப்படவில்லை.
சர்வதேச சந்தை
வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் சிலிக்கான் வேலி பேங்க் திவால் காரணமாக டாவ் ஜோன்ஸ் 4.4 சதவீதமும், எஸ் அண்ட் பி 500 மற்றும் நாஸ்டாக் 4.7 சதவீதமும் சரிவை சந்தித்தது.
இதன் எதிரொலி திங்கட்கிழமை காலை வர்த்தகம் துவங்கியது முதல் ஜப்பான் நிக்கி, ஆஸ்திரேலியா, பிரிட்டன் என அனைத்தும் 2 மாத சரிவுக்கு கொண்டு சென்றது. இதன் வாயிலாக இந்திய சந்தையும் பெரும் சரிவை பதிவு செய்தது.
வங்கி பங்குகள்
இன்றைய வர்த்தகத்தில் வங்கி பங்குகள் தான் அதிகளவில் சரிந்தது, இந்தியாவில் மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த ஆசிய சந்தையிலும் வங்கி பங்குகள் சரிந்தது. நிஃப்டி வங்கி சுமார் 2.3 சதவீதம் வரையில் சரிந்தது. இண்டஸ்இந்த வங்கி பங்குகள் அதிகப்படியாக 7 சதவீதம் வரையில் சரிந்தது. பொதுத்துறை வங்கிகள் 5 சதவீதம் வரையில் சரிந்தது.
வங்கி கட்டமைப்பு
அமெரிக்க போன்ற வல்லரசு நாடுகளில் 48 மணி நேரத்தில் சிலிக்கான் வேலி பேங்க், சிக்னேச்சர் பேங்க் என 200 பில்லியன் டாலருக்கும் அதிகமான டெபாசிட் வைத்திருக்கும் வங்கிகள் திவாலாகியுள்ள நிலையில் ஒட்டுமொத்த முதலீடு சந்தையும் மோசமான நிலைக்கு சென்று வங்கி கட்டமைப்பு மீது முதலீட்டாளர்களுக்கு பெரும் சந்தேகமும், அச்சமும் வந்துள்ளது. இதன் வெளிப்பாடு தான் இது.
நிஃப்டி
நிஃப்டி குறியீடு இன்றைய வர்த்தக முடிவில் 258.60 புள்ளிகள் சரிந்து 17,154.30 புள்ளிகள் சரிந்தது. மேலும் மிட்கேப் 50, ஸ்மால்கேப் 50 ஆகிய இரு குறியீடும் 2 சதத்திற்கும் அதிகமாக சரிந்துள்ளது. இதேபோல் வங்கி குறியீடுகள் அதிகளவிலான சரிவை பதிவு செய்துள்ளது, நிஃப்டி வங்கி 2.27 சதவீதமும், நிஃப்டி PSU வங்கி 2.87 சதவீதமும், நிஃப்டி பிரைவேட் வங்கி 2.44 சதவீதமும் சரிந்துள்ளது.
More From GoodReturns

திங்கட்கிழமை பங்குச்சந்தை ஒரு காட்டு காட்ட போகுது.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்..!!

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

டீ குடிக்கிற காசு போதும்!5 வருடத்தில் லட்சாதிபதி ஆக இந்த மேஜிக் கணக்கை பாருங்க!

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?



Click it and Unblock the Notifications