நேற்றை உயர்வை விழுங்கியது இன்றைய வர்த்தகம்.. 267 புள்ளிகள் சரிவு..!
நேற்றை உயர்வை விழுங்கியது இன்றைய வர்த்தகம்.. 267 புள்ளிகள் சரிவு..!
வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 267.41 புள்ளிகள் வரை குறைந்துள்ளது.
முதலீட்டாளர்கள் இன்று லாபத்திற்காக வங்கி, எண்ணெய் மற்றும் மெட்டல் நிறுவனப் பங்குகளை அதிகளவில் விற்பனை செய்த காரணத்தால் இன்று சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு அதிகளவிலான சரிவை அடைந்துள்ளது.

மேலும் இன்றைய வர்த்தகத்தில் அவென்யூ சூப்பர் மார்க்கெட் நிறுவனத்தின் பங்குகள் 5.3 சதவீதம் வரை உயர்ந்து 814 ரூபாய் என்ற உயரிய விலையை அடைந்துள்ளது.
இன்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 267.41 புள்ளிகள் சரிந்து 29,858.80 புள்ளிகளையும், நிஃப்டி குறியீடு 74.60 புள்ளிகள் சரிந்து 9,285.30 புள்ளிகளை எட்டி வெள்ளிக்கிழமை வர்த்தகம் முடிவடைந்தது.


Click it and Unblock the Notifications