இன்று காலை அமர்வில் இந்திய பங்கு சந்தைகள் நல்ல ஏற்றத்தில் காணப்பட்டன. ஆனால் முடிவில் சரிவில் முடிவடைந்துள்ளன.
குறிப்பாக மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 19.69 புள்ளிகள் குறைந்து, 51,329.08 ஆகவும், இதே தேசிய பங்கு சந்தை நிஃப்டி 6.50 புள்ளிகள் குறைந்து, 15,109.30 ஆகவும் முடிவடைந்துள்ளது.

இதே அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 8 பைசா அதிகரித்து 72.88 ரூபாயாக முடிவடைந்துள்ளது. முந்தைய அமர்வில் 72.96 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
இதற்கிடையில் நிஃப்டி, சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள பெரும்பாலான குறியீடுகள் சரிவிலேயே முடிவடைந்துள்ளன.
நிஃப்டி குறியீட்டில் உள்ள ஏசியன் பெயிண்ட்ஸ், எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ், ஹெச்டிஎஃப்சி லைஃப், ஒஎன்ஜிசி, டைட்டன் நிறுவனம் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், ஐஓசி, எம்&எம், டாடா மோட்டார்ஸ், ஜேஎஸ்டபள்யூ ஸ்டீல், பஜாஜ் ஆட்டோ உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் காணப்படுகின்றது.
இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள ஏசியன் பெயிண்ட்ஸ், ஒஎன்ஜிசி, டைட்டன் நிறுவனம், லார்சன், ஆக்ஸிஸ் வங்கி உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், எம்&எம், பஜாஜ் பைனான்ஸ், ஐடிசி, சன் பார்மா, பஜாஜ் ஆட்டோ உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் காணப்படுகின்றது.
சந்தையில் பலத்த செல்லிங் பிரசர் இருந்ததால் இந்திய சந்தைகள் ஏற்றத்தினை தக்கவைத்துக் கொள்ள முடியாமல், இன்று சரிவில் முடிவடைந்துள்ளன. அதோடு ஐரோப்பிய சந்தைகள், அன்னிய முதலீடு வெளியேற்றம் உள்ளிட்ட சில காரணங்களால் சந்தை சரிவினைக் கண்டது.
அதோடு ஆட்டோ, பார்மா மற்றும் மீடியா, பார்மா பங்குகள் மிக மோசமான சரிவினைக் கண்டுள்ளன. எனினும் வங்கி மற்றும் நிதி சார்ந்த பங்குகள் ஏற்றத்தில் முடிவடைந்துள்ளன.
.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications