நடப்பு ஆண்டில் இந்திய சந்தைகள் முதலீட்டாளர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக நல்ல ஏற்றத்தினை கண்டன. இது அடுத்த ஆண்டிலும் தொடருமா? இனி எப்படி இருக்கும்? தற்போது ஹோல்டு செய்துள்ள நிறுவனங்களை அப்படியே வைத்திருக்கலாமா? அடுத்து என்ன செய்யலாம்? நிபுணர்களின் கணிப்பு என்ன? வாருங்கள் பார்க்கலாம்.
பெரும்பாலான நிபுணர்கள் நடப்பு ஆண்டிலும் இந்திய சந்தைகள் மீண்டும் உச்சத்தினை எட்டலாம் என கணித்துள்ளனர்.
அடுத்த சில ஆண்டுகளுக்கு இந்திய கார்ப்பரேட்டுகளின் வளர்ச்சி விகிதமானது அதிகரிக்கலாம். இதன் காரணமாக அதன் பங்கு விலையும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இரு இலக்கில் வளர்ச்சி
இந்திய பெஞ்ச்மார்க் குறியீடுகளான சென்செக்ஸ், நிஃப்டி இரண்டும் நடப்பு ஆண்டில் 20% மேலாக அதிகரித்துள்ளது. ஆனால் அதேசமயம் பிஎஸ்இ மிட்கேப் மற்றும் ஸ்மால் கேப் குறியீடுகள் 35% மற்றும் 60% ஆக அதிகரித்துள்ளன.
இதற்கிடையில் பல நிபுணர்கள் 2022ல் சந்தையானது இரு இலக்க வளர்ச்சி காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிஃப்டி இலக்கு
சமீபத்திய வாரங்களாக சந்தையானது சற்று சரிவினைக் கண்டு வரும் நிலையில், இது புராபிட் புக்கிங் காரணமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் சந்தையானது மீண்டும் ஏற்றம் காணலாம். குறிப்பாக நிஃப்டி 20,000 புள்ளிகளையும், அடுத்ததாக 21,300 புள்ளிகளையும் தொடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்செக்ஸ் இலக்கு
இதே சென்செக்ஸ் 66,600 மற்றும் 71,000 புள்ளிகளையும் தொடலாம் என கணித்துள்ளனர். எனினும் பரவி வரும் ஓமிக்ரான் காரணமாக சற்று ஏற்ற இறக்கம் இருக்கலாம். ஆனால் நீண்டகால நோக்கில் சந்தையானது ஏற்றத்தினையே காணலாம்.
நிஃப்டி & சென்செக்ஸ் இலக்கு
இதே மற்றொரு புரோக்கிங் நிறுவனம் சென்செக்ஸ் இலக்கானது 65,000 - 70,000 புள்ளிகளை காணலாமென எதிர்பார்க்கப்படுகிறது. இதே நிஃப்டி 22,000 புள்ளிகளை எட்டலாம் என பிசினஸ் டுடேவில் வெளியான கணிப்பானது கூறியுள்ளது.
பங்கு பரிந்துரை
இதற்கிடையில் 2022ல் ரிலையன்ஸ் இண்டஸ்ட் ரீஸ், லார்சன் & டூப்ரோ, மேக்ரோடெக் டெவலப்பர்ஸ், ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லைஃப், ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்ட பங்குகள் நல்ல ஏற்றத்தினை காணலாம். பிரமல் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் பங்கினையும் வாங்கலாம் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.
More From GoodReturns

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

டீ குடிக்கிற காசு போதும்!5 வருடத்தில் லட்சாதிபதி ஆக இந்த மேஜிக் கணக்கை பாருங்க!

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?



Click it and Unblock the Notifications