இந்திய பங்கு சந்தையானது வரும் வாரத்தில் மீண்டும் ஏற்றத்தினை காணலாம் என பல தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர். எனினும் கவனிக்க வேண்டிய சில முக்கிய காரணிகள் குறித்தும் பட்டியலிட்டுள்ளனர்.
அவற்றில் அன்னிய செலவாணி கையிருப்பு தொடங்கி, டெபாசிட் வளர்ச்சி, ஜி20 மாநாடு, வங்கி கடன் வளர்ச்சி என பல காரணிகளும் கவனிக்க வேண்டிய காரணிகளாக உள்ளன.
அமெரிக்க தரவுகள்
அமெரிக்காவில் நாளை விடுமுறை என்பதால் சந்தையில் பெரியளவில் மாற்றம் இருக்கலாம் என்றாலும், எஸ் & பி குளோபல் உற்பத்தி PMI Flash, எஸ்&பி குளோபல் சர்வீசஸ் பி எம் ஐ Flash உள்ளிட்ட சில தரவுகள் வெளியாகவுள்ளன. இது தவிர வீடு விற்பனை குறித்தான தரவானது பிப்ரவரி 2022 அன்று வெளியாகவுள்ளது. ரெட்புக், எம்.ஓ.எம்.சி மினிட்ஸ், கச்சா எண்ணெய் இருப்பு குறித்தான தரவு, ஜிடிபி வளர்ச்சி, EIA கச்சா எண்ணெய், வீடு விற்பனை உள்ளிட்ட பல தரவுகளும் வெளியாகவுள்ளது. இது சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.
அன்னிய முதலீட்டு நிலவரம்
அன்னிய முதலீடானது சந்தையில் பெரியளவில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். நிப்டி நட்பபு ஆண்டில் இதுவரையில் 1.4% குறைந்துள்ளது. மாறாக தைவான் இன்டெக்ஸ் ஆனது 8.3% ஏற்றத்திலும், ஷாங்காய் காம்பேசைட் குறியீடானது 3.4% ஆகவும் உயர்ந்துள்ளது. இதற்கு காரணம் இந்தியாவில் இருந்து வெளியேறி வரும் முதலீடானது, சீனா, தைவான், ஹாங்காங் மற்றும் தென் கொரியா போன்ற நாடுகளில் அதிகரித்துள்ளது. ஆக வரவிருக்கும் நாட்களிலும் அன்னிய முதலீடானது சந்தையில் தங்கத்தினை ஏற்படுத்தலாம்.
சீனா
சீனாவில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், பொருளாதாரம் என்பது வளர்ச்சி பாதைக்கு திரும்பிக் கொண்டுள்ளது. இதற்கிடையில் இந்தியாவில் இருந்து வெளியேறி வரும் முதலீடுகள், பெரியளவில் சீனாவில் செய்யப்பட்டு வருகின்றது. சமீபத்திய வாரங்களாக இந்திய சந்தையில் அதிகளவிலான ஏற்ற இறக்கம் என்பது இருந்து வரும் நிலையில், அது இந்திய சந்தையில் பெரியளவில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில் தான் இந்திய சந்தையில் இருந்து முதலீடுகள் வெளியேறி வருகின்றன.
நிப்டி டெக்னிக்கல் பேட்டர்ன்
நிஃப்ட்சி கடந்த வாரத்தில் சற்றே ஏற்றத்தில் முடிவடைந்த நிலையில், இது வரும் வாரத்திலும் சற்றே ஏற்ற இறக்கத்தினை காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இதுவும் வரவிருக்கும் நாட்களில் சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம், இதன் முக்கிய சப்போர்ட் லெவல் ஆக 17800 ஆகவும், முக்கிய ரெசிஸ்டன்ஸ் லெவல் ஆக 18,150 ஆகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. .
முக்கிய முடிவுகள்
இது தவிர வரவிருக்கும் வாரத்தில் வெளியாகவிருக்கும் இந்திய தரவுகள், சர்வதேச தரவுகள், முக்கிய காலாண்டு முடிவுகள் என பலவும் வெளியாகவுள்ளன. ஆக இதுவும் சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.
இது தவிர ரூபாயின் மதிப்பு, கச்சா எண்ணெய் விலை என பலவும் சந்தையில் கவனிக்க வேண்டிய ஒன்றாக உள்ளது. இது தவிர பல நிறுவனங்களின் பங்குகள் டிவிடெண்டினை அறிவிக்க உள்ளன. சில நிறுவனங்கள் பங்கினை ஸ்பிளிட் செய்யவுள்ளன.
கவனத்தில் கொள்ள வேண்டியது?
வங்கி பிக்சட் டெபாசிட் வளர்ச்சி, கடன் வளர்ச்சி, அமெரிக்காவின் தரவு என பலவும் வெளியாகவுள்ளது. இதற்கிடையில் ஜி20 கூட்டம் பிப்ரவரி 24 - 25 அன்று பெங்களூரில் நடக்கவுள்ள நிலையில், இதுவும் சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.


Click it and Unblock the Notifications