நேற்று பங்கு சந்தை புதிய உச்சத்தினைத் தொட்ட அடுத்த நாளே ஆசிய சந்தையின் பலவீனத்தினால் சென்செக்ஸ் மற்றும் நிப்டி இரண்டும் சரிவுடன் முடிந்தது.
இரண்டு பங்கு சந்தைக் குறியீடுகளும் மத்திய அரசின் பொதுத் துறை வங்கிகளுக்கான மறு மூலதன முதலீட்டை அறிவித்ததை அடுத்து இன்று பங்கு சரிந்துள்ள மாற்றத்தினை விளக்கமாகப் பார்க்கலாம்.
இன்றைய நிலை
மும்பை பங்கு சந்தைக் குறியீடான சென்செக்ஸ் 53.03 புள்ளிகள் என 0.16 சதவீதம் சரிந்து 33,213.13 புள்ளிகளாக வர்த்தக நேரத்தின் முடிவில் சந்தை இருந்தது. அதே நேரம் தேசிய பங்குச் சந்தை குறியீடான நிப்டி 28.35 புள்ளிகள் அதாவது 0.27 சதவீதம் சரிந்து 10,335.30 புள்ளிகள் சரிந்து வர்த்தகம் ஆனது.
துறை சார்ந்த அறிக்கை
மெட்டல் நிறுவனப் பங்குகள் 2.06 சதவீதம் வரையிலும், ஐடி நிறுவனப் பங்குகளும் 0.6 சதவீதம், பொதுத் துறை வங்கி நிறுவனப் பங்குகள் 0.49 சதவீதம் வரையிலும், ஆட்டோ துறை சார்ந்த பங்குகள் 0.48 சதவீதம் வரை சரிந்து வர்த்தகம் ஆனது. அதே நேரம் ரியாலிட்டி துறை, நுகர்வோர் சாதனங்கள் துறை, எண்ணெய் நிறுவனப் பங்குகள் உயர்வை அளித்தன.
லாபமீட்டியவர்கள்
அக்சிஸ் வங்கி (+ 8.16%), ஓஎன்ஜிசி (+ 2.12%), எச்டிஎப்சி (+ 0.95%), பார்தி ஏர்டெல் (+ 0.9%) மற்றும் டிசிஎஸ் (+ 0.57%)
நட்டமடைந்தவர்கள்
இன்ஃபோசிஸ் (-2.27%), டாடா ஸ்டீல் (-2.22%), எம் & எம் (-2.04%), ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (-1.89%), கோல் இந்தியா (-1.56%)


Click it and Unblock the Notifications