ஆசிய பங்குச்சந்தை மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வால் தொடர்ந்து சரிந்து வந்த மும்பை பங்குச்சந்தை, அமெரிக்கா - சீனா இடையிலான வர்த்தகப் போர் பதற்றம் இருநாட்டுத் தலைவர்களின் பேச்சுவார்த்தையால் தணிந்துள்ளது. இதன் வாயிலாக ஆசிய சந்தையில் கணிசமான முதலீடு அதிகரித்துள்ளது.
இதன் வாயிலாக மும்பை பங்குச்சந்தையின் இன்றைய வர்த்தகத்தில் பல ஏற்ற இறக்கங்களைச் சந்தித்த பின்பு வர்த்தகம் உயர்வுடன் முடிந்தது.

செவ்வாய்க்கிழமை வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 35.11 புள்ளிகள் உயர்வில் 34,651.24 புள்ளிகளை அடைந்தது. அதேபோல் நிஃப்டி குறியீடு 20.00 புள்ளிகள் உயர்ந்து 10,536.70 புள்ளிகளை அடைந்து இன்றைய வர்த்தகம் முடிவடைந்துள்ளது.
நேற்றைய வர்த்தகத்தில் பார்மா பங்குகள் அதிகளவிலான சரிவை சந்தித்த நிலையில் இன்று டாக்டர் ரெட்டி 6.30 சதவீதமும், சன் பார்மா 2.07 சதவீதம் வரையிலும் உயர்ந்துள்ளது. இதைத் தொடர்ந்து பஜாஜ் ஆட்டோ, டாடா மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்கள் சீனாவின் அதிரடி அறிவிப்பால் உயர்ந்துள்ளது.
மேலும் இன்றைய வர்த்தகத்தில் டிசிஎஸ், ஏசியன் பெயின்ட்ஸ், ஆக்சிஸ் வங்கி, இண்டஸ்இந்த் வங்கி, ஐடிசி, பவர் கிரிட் ஆகிய நிறுவனங்கள் 1 சதவீதத்திற்கும் அதிகமான சரிவை அடைந்துள்ளது.


Click it and Unblock the Notifications