நாட்டின் பணவீக்கத்தை குறைப்பதற்காக ரிசர்வ் வங்கி இன்று நடத்திய இரண்டு நாள் நாணய கொள்கை கூட்டத்தில் வட்டி விகிதத்தை மாற்றவில்லை என் ஆர்பிஐ கவர்னர் தெரிவித்தார்.
இது சந்தை முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அளித்ததன் எதிரொலியாக சென்செக்ஸ் குறியீடு இன்று 231 புள்ளிகள் வரை உயர்ந்தது.
ஆசிய சந்தை
இன்று காலை வர்த்தகம் துவங்கும் போது ஆசிய சந்தையின் வலிமையான வர்த்தக சூழ்நிலையில் மும்பை பங்குச்சந்தை வர்த்தகத்தில் உயர்வை கண்டது.
மும்பை பங்குச்சந்தை
ஆசிய சந்தையில் வலிமையான வர்த்தக சூழ்நிலையில், மும்பை பங்குச்சந்தையில் கணிசமான முதலீடுகள் குவிந்ததால், தொடர்ந்து வர்த்தகம் நிலையான உயர்வை கண்டது. மேலும் ரூபாய் மதிப்பில் அதிகளவிலான சரிவு ஏதுமில்லா காரணத்தால் இன்று வர்த்தகம் நிலையான உயர்வை கண்டது.
சென்செக்ஸ்
இன்று வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 174.33 புள்ளிகள் உயர்ந்து 31,671.71 புள்ளிகளை அடைந்தது.
ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு வெளியான தருணத்தில் சென்செக்ஸ் 231 புள்ளிகள் வரை உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.
நிஃப்டி
சென்செக்ஸ் குறியீட்டை போல் தொடர் உயர்வில் நிஃப்டி குறியீடு இன்று 55.40 புள்ளிகள் உயர்ந்து 9,914.90 புள்ளிகளை அடைந்தது.


Click it and Unblock the Notifications