ஆசிய பங்கு சந்தைகளுக்கு இன்று நல்ல நாள் என்று கூறலாம். வர்த்தகப் போர் நடத்துவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்த இருந்தது முதலீட்டாளர்கள் மத்தியில் கடந்த இரண்டு நாட்களாக ஏமாற்றத்தினை அளித்து வந்தது. ஆனால் சென்செக்ஸ், நிப்டி என இரண்டும் இன்று லாபத்துடன் சந்தையை முடித்துக்கொண்டுள்ளது.
கடந்த ஆறு நாட்களாக நட்டம் அளித்து வந்த இந்திய பங்கு சந்தை இன்று மீண்டும் யூ-டர்ன் அடித்து லாபம் அளிக்கத் துவங்கியுள்ளது. ஆனால் அமெரிக்காவில் ஸ்டீல் மீது இறக்குமதி வரியை உயர்த்தியுள்ளது இன்னும் பங்கு சந்தையில் தக்கத்தினை ஏற்படுத்தி வருகிறது.
இன்றைய சந்தை நிலவரம்
இன்றைய பங்கு சந்தை நேர முடிவில் மும்பை பங்கு சந்தைக் குறியீடான சென்செக்ஸ் 318.48 புள்ளிகள் என 0.96 சதவீதம் உயர்ந்து 33,351.57 புள்ளிகளாகவும், தேசிய பங்கு சந்தைக் குறியீடான நிப்டி 90.35 புள்ளிகள் என 0.89 சதவீதம் உயர்ந்து 10,244.55 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்பட்டது.
துறை சார்ந்த அறிக்கை
மும்பை பங்கு சந்தையினைப் பெருத்தவரையில் ரியாலிட்டி நிறுவனப் பங்குகள் 1.63 சதவீதமும், வங்கி துறை பங்குகள் 1.43 சதவீதமும், மின்சாரத் துறை சார்ந்த பங்குகள் 1.30 சதவீதமும், நிதி துறை பங்குகள் 1.21 சதவீதமும் லாபத்தினை அளித்துள்ளன. அதே நேரம் மெட்டல் துறை பங்குகள் 0.15 சதவீதமும், டெலிகாம் துறை பங்குகள் 0.30 சதவீதமும், ஹெல்த்கேர் துறை சார்ந்த பங்குகள் 0.25 சதவீதமும் நட்டம் அளித்துள்ளன.
லாபம் அளித்த பங்குகள்
எஸ்பிஐ (+4.09%), ஐசிஐசிஐ வங்கி (+3.58%), அதானி போர்ட்ஸ் (+2.95%), மகேந்திரா & மகேந்திரா (+2.45%), ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (+2.25%), எச்டிஎப்சி (+1.97%)
நட்டம் அளித்த பங்குகள்
டாடா ஸ்டீல் (-1.98%), சன் பார்மா (-1.85%), யெஸ் வங்கி (-1.63%), டிசிஎஸ் (-0.92%), டாடா மோட்டார்ஸ் (-0.60%), பார்தி ஏர்டெல் (-0.55%)
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications