சீனா அமெரிக்கா இடையிலான பிரச்சனை வெடித்த காரணத்தால் அமரிக்கப் பங்குச்சந்தை கடந்த வாரம் பெரிய அளவிலான சரிவை சந்தித்தது. இந்நிலையில் வர்த்தகப் போர் பிரச்சனை சற்று தணிந்த காரணத்தால் ஆசிய பங்குகள் திங்கட்கிழமை வர்த்தகத்தில் உயர்வடையத் துவங்கியது.
இந்நிலையில் இந்த உயர்வு செவ்வாய்க்கிழமை வர்த்தகத்திலும் எதிரொலித்த காரணத்தால் இன்றைய வர்த்தகத்தில் 200 புள்ளிகளுக்கும் அதிகமான வளர்ச்சியை அடைந்தது.
மும்பை பங்குச்சந்தை
ஆசிய சந்தையின் நிலையான வர்த்தகத்தின் வாயிலாக இன்றைய வர்த்தகத் துவக்கத்தின் முதலே சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு உயர்வுடனே துவங்கியது.
ஐரோப்பிய சந்தை
காலை வர்த்தகத்தில் சென்செக்ஸ் 200 புள்ளிகள் வரை உயர்ந்தாலும், தொடர்ந்து சரிவு பாதையைச் சந்தித்தது சென்செக்ஸ். ஐரோப்பிய சந்தை துவக்கத்தில் சென்செக்ஸ் கணிசமாக உயர்ந்து 100 புள்ளிகள் என்ற உயர்வில் நிலைப்பெற்றது.
சென்செக்ஸ்
இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 107.98 புள்ளிகள் உயர்ந்து 33,174.39 புள்ளிகள் அடைந்தது. நிப்டி குறியீடு உயர்வை விடவும் அதிகளவிலான சரிவையே சந்தித்தாலும், வர்த்தக முடிவில் திங்கட்கிழமை வர்த்தகத்தில் எவ்விதமான மாற்றமும் இல்லாமல் 0.00 புள்ளிகளுடன் 10,184.15 புள்ளிகளை அடைந்தது.
முக்கிய நிறுவனங்கள்
இன்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் எஸ்பிஐ, இன்டஸ்இந்த் வங்கி, டாடா ஸ்டீல், கோட்டாக் மஹிந்திரா வங்கி, ஏசியன் பெயின்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் அதிகளவிலான வளர்ச்சியைப் பதிவு செய்தது.
பார்தி ஏர்டெல், பஜாஜ் ஆட்டோ, எச்டிஎப்சி ஆகிய நிறுவனங்கள் அதிகளவிலான சரிவை சந்தித்தது.


Click it and Unblock the Notifications