கடந்த சில நாட்களாக வங்கி பங்குகள் மீதான முதலீட்டு அளவுகள் அதிகரித்து வரும் நிலையில் முதலீட்டாளர்கள் கணிசமான லாபத்தை அடைந்து வருகின்றனர். இதனால் பன்னாட்டு முதலீட்டாளர்களும் தற்போது அதிகளவிலான முதலீட்டை இந்திய சந்தையில் செய்து வருகின்றனர்.
காலாண்டு முடிவுகள்
நாட்டின் முன்னணி நிறுவனங்கள் ஜனவரி-மார்ச் காலாண்டு முடிவுகள் வெளிவரும் காரணத்தால் இந்த மாத வர்த்தகம் சிறப்பாக இருக்கும் எனக் கணிப்புகள் வெளியாகியுள்ளது. மேலும் வரும் வெளிக்கிழமை இன்போசிஸ் தனது காலாண்டு முடிவுகளை வெளியிடுகிறது.
டொனால்டு டிரம்ப்
இதுமட்டும் அல்லாமல் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் டிவிட்டரில் சீனாவை பற்றித் தொடர்ந்து விமர்சனம் செய்து வந்தாலும், அமெரிக்கப் பங்குச்சந்தையில் பெரிய அளவிலான மாற்றும் எதுவுமில்லை.
மும்பை பங்குச்சந்தை
திங்கட்கிழமை இந்திய சந்தைக்குச் சாதகமான வர்த்தகச் சூழ்நிலையில் அமைந்ததன் எதிரொலியாக இன்றைய வர்த்தகம் துவக்கம் முதல் தொடர்ந்து உயர்வான நிலையிலேயே மும்பை பங்குச்சந்தை இருந்தது.
சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி
இதன் காரணமாக இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 161.57 புள்ளிகள் உயர்ந்து 33,788.54 புள்ளிகளை அடைந்திருந்தது. அதேபோல் நிஃப்டி குறியீடு 47.75 புள்ளிகள் உயர்ந்து 10,379.35 புள்ளிகள் அடைந்து இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது.
முக்கிய நிறுவனங்கள்
இன்றைய வர்த்தகத்தில் ஆக்சிஸ் வங்கி, மஹிந்திரா, ஐடிசி, இன்டஸ்இந்த் வங்கி, ஹிந்துஸ்தான் யூனிலீவர் ஆகிய நிறுவனங்கள் அதிகளவிலான உயர்வை சந்தித்தது.


Click it and Unblock the Notifications