டிசம்பர் மாதத்தின் டிரைவேட்டிவ் ஆர்டர்கள் இன்று முடிவடையும் காரணத்தால் முதலீட்டு அளவுகள் சற்று குறைவாகக் காணப்பட்டது. இதனால் காலை வர்த்தகம் துவங்கும் முதல் தொடர்ந்து மந்தமான வர்த்தகத்தை மட்டுமே பதிவு செய்தது.
ஆனால் ஐரோப்பிய சந்தையின் துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தையில் முதலீட்டு அளவுகள் கணிசமாக உயர்ந்தது, இதன் எதிரொலியாகச் சென்செக்ஸ் குறியீடு 100 புள்ளிகள் வரையில் உயர்ந்து காணப்பட்டது.

இன்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 63.78 புள்ளிகள் சரிந்து 33,848.03 புள்ளிகளை அடைந்தது, அதேபோல் நிஃப்டி குறியீடு 12.85 புள்ளிகள் சரிந்து 10,477.90 புள்ளிகள் அடைந்து வியாழக்கிழமை வர்த்தகம் முடிவடைந்தது.
மேலும் எஸ் அண்ட் பி குறியீட்டின் கீழ் இருக்கும் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் எஸ்பிஐ, ஹீரோமோட்டோ கார்ப், சன் பார்மா, அதானி போர்ட்ஸ், ஆக்சிஸ் வங்கி அதிகளவிலான சரிவை சந்தித்தது.


Click it and Unblock the Notifications