மந்தமான வர்த்தகத்தை பதிவு செய்த மும்பை பங்குச்சந்தை
மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 32,000 புள்ளிகள் என்ற உச்ச நிலையை அடைந்த நிலையில், இன்று தொழில்நுட்பம், எச்டிஎப்சி, மெட்டல் மற்றும் ஆட்டோமொபைல் துறை சார்ந்த நிறுவனங்களின் பங்குகள் அதிகளவிலான சரிவை சந்தித்துள்ளது.
வெள்ளிக்கிழமை வர்த்தக துவக்கத்தில் மந்தமான வர்த்தகத்தை பதிவு செய்த மும்பை பங்குச்சந்தை வர்த்தக முடியும் வரையும் குறைவான வர்த்தகத்தை மட்டுமே பெற்றது.

இதன் வாயிலாக இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 16.63 புள்ளிகள் குறைந்து 32,020.75 புள்ளிகளை அடைந்துள்ளது.
சென்செக்ஸ் குறியீட்டை போல் நிஃப்டி குறியீடு 5.35 புள்ளிகள் குறைந்து 9,886.35 புள்ளிகளை எட்டி இன்றைய வர்த்தகம் முடிவடைந்துள்ளது.


Click it and Unblock the Notifications