லாபத்தில் முடிந்த சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு..!
கச்சா எண்ணெய் விலையில் ஏற்ப்ட்ட மாற்றங்கள், மூடி அமைப்பு உயர்த்திய தரம் அகியவற்றின் எதிரொலிகள் முடிந்த நிலையில் இன்று வர்த்தகம் மந்தமாகவே காணப்பட்டது.
இதன் காரணமாக இன்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு பல ஏற்றஇறக்கங்களை சந்தித்து தட்டுத்தடுமாறி லாபகரமான நிலையில் வர்த்தகம் முடிவடைந்துள்ளது.

இன்றைய வர்த்தகம் முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 17.10 புள்ளிகள் உயர்ந்து 33,359.90 ள்ளிகளை அடைந்துள்ளது. நிஃப்டி குறியீடு 15.15 புள்ளிகள் மட்டுமே உயர்ந்து 10,298.75 புள்ளிகளை அடைந்து வாரத்தின் முதல் நாள் வர்த்தகம் முடிவடைந்துள்ளது.
திங்கட்கிழமை வர்த்தகத்தில் கோல் இந்தியா, என்டிபிசி, ஒஎன்ஜிசி, கோட்டாக் மஹிந்திரா, ரிலையன்ஸ், மாருதி ஆகிய நிறுவனங்கள் அதிகளவிலான லாபத்தை சந்தித்தது.


Click it and Unblock the Notifications