2017-18 நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் மூலம் இந்திய பங்குச்சந்தையில் அதிகளவிலான முதலீடு குறிந்த நிலையில் கடந்த 3 நாட்களாகத் தொடர் உயர்விலேயே சென்செக்ஸ் குறியீடு உள்ளது.
2017-18 நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் மூலம் இந்திய பங்குச்சந்தையில் அதிகளவிலான முதலீடு குறிந்த நிலையில் கடந்த 3 நாட்களாகத் தொடர் உயர்விலேயே சென்செக்ஸ் குறியீடு உள்ளது.
பட்ஜெட் தாக்கலுக்குப் பின் ரிசர்வ் வங்கி தனது இருமாத நாணய கொள்கையை வருகிற பிப்.8ஆம் தேதி தாக்கல் செய்யப்படுவதால் முதலீட்டாளர்கள் கடன் சந்தையில் தங்களது முதலீட்டு அளவுகளை அதிகளவில் குறைத்தனர்.
இதனால் வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு பல ஏற்ற இறக்கங்களைச் சந்தித்தது. இதன் எதிரொலியா இன்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு வெறும் 14 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகம் முடிந்தது.
வாரத்தின் கடைசி நாளான இன்று சென்செக்ஸ் குறியீடு 13.91 புள்ளிகள் உயர்ந்து 28,240.52 புள்ளிகளை அடைந்தது. நிஃப்டி குறியீடு 6.70 புள்ளிகள் உயர்ந்து 8,740.95 புள்ளிகளை அடைந்து இந்த வாரத்தின் வர்த்தகம் முழுமையாக முடிந்துள்ளது.

Click it and Unblock the Notifications