மோர்கன் ஸ்டான்லி நிறுவனம் ஆக்சிஸ் வங்கியின் மதிப்புக் குறைப்பு, அமெரிக்க உணவு மற்றும் மருந்து அமைச்சகம் இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனத்திடம் விதித்துள்ள நடவடிக்கைகள் ஆகிய காரணங்களால் மும்பை பங்குச்சந்தை இன்று சரிவுடன் முடிவடைந்தது.
மும்பை பங்குச்சந்தையில் இன்று வர்த்தகம் உயர்வுடன் முடிவடைந்தாலும், 10 மணிக்குப்பின் தொடர் சரிவை சந்தித்தது. இதன் மூலம் முதலீட்டாளர்கள் கணிசமாகத் தங்களது முதலீட்டு அளவுகளைக் குறைத்துள்ளனர்.

இதன் எதிரொலியாக இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 33.29 புள்ளிகள் சரிந்து 29,485.45 புள்ளிகளை எட்டியது.
சென்செக்ஸ் குறியீட்டை போலவே உயர்வில் துவங்கிய நிஃப்டி குறியீடு 5.35 புள்ளிகள் சரிந்து 9,121.50 புள்ளிகளை அடைந்தது.
மேலும் இன்றைய சரிவிற்கு முக்கியமாகச் சர்வதேச சந்தையின் மந்தமான வர்த்தக நிலையும் முக்கியக் காரணமாகும்.


Click it and Unblock the Notifications