மும்பை: பங்கு சந்தை இன்று காலை துவங்கிய உடன் சென்செக்ஸ் 200 புள்ளிகள் உயர்ந்து புதிய உச்சத்தினைத் தொட்டது. ஆனால் சந்தை நேர முடிவில் சென்செக்ஸ், நிப்டி என இரண்டுமே சிறிய அளவில் சரிந்தது.
இன்போசிஸ் நிறுவனத்தின் காலாண்டு அறிக்கை வெளியிடப்பட உள்ள நிலையில் பங்குகள் உயர்வுடன் முடிந்தது. அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு உயர்ந்தது. அமெரிக்கச் சந்தையில் அதிகரித்துள்ள அச்சுறுத்தலுக்கு எதிராகப் பதிலடித் திட்டங்களைச் சீனா விவரித்துள்ள நிலையில், உலகச் சந்தையில், ஆசிய பங்குச் சந்தைகளில் அமெரிக்காவின் ஆதாயங்கள் காணப்பட்டன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையும் சரிந்துள்ளது. எனவே இன்றைய பங்கு சந்தை நிலவரத்தினை விளக்கமாக இங்குப் பார்க்கலாம்.
இன்றைய நிலவரம்
சந்தை நேர முடிவில் மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் 6.78 புள்ளிகள் என 0.02 சதவீதம் சரிந்து 36,541.63 புள்ளிகளாகவும், தேசிய பங்கு சந்தை குறியீடான நிப்டி 4.30 புள்ளிகள் என 0.04 சதவீதம் சரிந்து 11,018.90 புள்ளிகளாகவும் வர்த்தகம் செய்யப்பட்டு இருந்தது.
துறை வாரியான நிலவரம்
மும்பை பங்கு சந்தையில் உள்ள 19 துறைகளில் 15 இன்று சரிந்துள்ளன. டெலிகாம், அடிப்படை பொருட்கள், ரியாலிட்டி மற்றும் தொழிற்சாலைகள் துறை சார்ந்த பங்குகள் 1.98 சதவீதம் வரை சரிந்துள்ளன. அதே நேரம் எனர்ஜி, ஐடி, எண்ணெய் மற்றும் எரிவாயு மற்றும் நுகர்வோர் சாதன பொருட்கள் துறைகள் லாபத்தினை அளித்துள்ளன.
லாபம் அளித்த நிறுவனங்கள்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், இன்போசிஸ், பஜாஜ் ஆட்டோ, ஏசியன் பெயிண்ட்ஸ், கோல் இந்தியா, எச்டிஎப்சி பங்குகள் நட்டத்தினை லாபத்தினை அளித்துள்ளன.
நட்டம் அளித்த நிறுவனங்கள்
ஓஎன்ஜிசி, ஆக்சிஸ் வங்கி, ஐடிசி, எஸ்பிஐ, ஐசிஐசிஐ வங்கி, ஹீரோ மோட்டோ கார்ப் பங்குகள் நட்டத்தினை அளித்துள்ளன.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications