ரிசர்வ் வங்கி அறிவிப்பால் சென்செக்ஸ் சரிவு..!
நடப்பு நிதியாண்டின் 5வது நாணய கொள்கை கூட்டத்தின் முடிவில் கணிப்புகளைப் போலவே ரெப்போ விகிதத்தில் எவ்விதமான மாற்றத்தையும் அறிவிக்கவில்லை.
பணவீக்கம் மற்றும் நாட்டின் வளர்ச்சியைக் காரணம் கட்டி வட்டி விகிதத்தில் மாற்றம் இருக்காது எனச் செவ்வாய்க்கிழமையே வெளியான நிலையில் இன்றைய வர்த்தகத் துவக்கத்தில் இருந்தே மந்தமான வர்த்தகத்தைப் பதிவு செய்தி வந்தது மும்பை பங்குச்சந்தை.

இதன் மூலம் ரிசர்வ் வங்கி வட்டி விகிதம் குறித்து அறிவிப்புகளை வெளியிட்ட நிலையில், சென்செக்ஸ் குறியீடு இன்றைய வர்த்தக முடிவில் 205.26 புள்ளிகள் வரையில் குறைந்து 32,597.18 புள்ளிகள் வரையில் குறைந்தது.
சென்செக்ஸ் குறியீட்டை போல் நிஃப்டி குறியீடும் இன்று சரிவுடனேயே துவங்கி 10,044.10 புள்ளிகளை அடைந்தது இன்றைய வர்த்தகம் முடிந்தது.


Click it and Unblock the Notifications