வரும் வாரத்தில் இந்திய பங்கு சந்தையானது எப்படியிருக்கும், கவனிக்க வேண்டிய காரணிகள் என்ன? வரும் வாரத்தில் எப்படியிருக்கும் ஏற்றம் இருக்குமா?
வரும் வாரத்தில் பல முக்கிய தரவுகள் வெளியாகவிருக்கும் நிலையில், சந்தையில் பெரியளவில் தாக்கம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச சந்தையில் நிலவி வரும் பதற்றமான நிலைக்கு மத்தியில், நுகர்வோர் விலை குறியீடு குறித்தான தரவானது வெளியாகவுள்ளது. இதே பிப்ரவரி 13 அன்று மொத்த விலை பணவீக்கம் குறித்தான தரவானது வெளியாகவுள்ளது. ஆக இதுவும் சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.
முக்கிய தரவுகள்
இதே சியாம் மொத்த வாகன விற்பனை குறித்தான தரவினை வரவிருக்கும் வாரத்தில் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இது வாகன நிறுவனங்களின் பங்கு விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். இதேபோல பேமெண்ட் குறித்தான தரவானது பிப்ரவரி 15 அன்று வெளியாகவுள்ளது. பிப்ரவரி 17 அன்று அன்னிய செலாவணி கையிருப்பு குறித்தான தரவானது வெளியாகவுள்ளது. ஆக இதுவும் சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.
முக்கிய காலாண்டு முடிவுகள்
வரும் வாரத்தில் அலுவாலியா, அஞ்சனி புட்ஸ், கேம்பஸ் ஆக்டிவ், பேஷன் நிறுவனமான நய்கா, இந்துஜா குளோபல், காமா ஹோல்டிங்ஸ், ரத்னமணி மெட்டல், இக்ரா, செயில், அதானி எண்டர்பிரைசஸ், அப்பல்லோ மருத்துவமனை, பயோகான், ஈச்சர் மோட்டார்ஸ், கிரசிம், NMDC, ஓ.என்.ஜி.சி, சீமென்ஸ், நெஸ்லே, PI இண்டஸ்ட்ரீஸ், Uflex மற்றும் ஜீ மீடியா உள்ளிட்ட நிறுவனங்களின் முடிவுகள் வெளியாகவுள்ளன.
அமெரிக்காவின் முக்கிய தரவுகள்
சர்வதேச சந்தையில் குறிப்பாக அமெரிக்காவில் முக்கிய தரவுகள் வெளியாகவுள்ளன. குறிப்பாக அமெரிக்காவின் பணவீக்கம் குறித்தான தரவு, கச்சா எண்ணெய் இருப்பு, சில்லறை விற்பனை குறித்தான தரவு, தொழில்துறை உற்பத்தி குறித்தான தரவு, வேலையின்மை குறித்தான தரவு, வேலையின்மை நலன் குறித்தான தரவு, இயற்கை எரிவாயு இருப்பு குறித்தான ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தரவு உள்ளிட்ட பல முக்கிய தரவுகள் வெளியாகவுள்ளது.
நிஃப்டி போக்கு?
கடந்த வாரத்தின் இறுதியில் நிஃப்டி சற்றே சரிவில் முடிவடைந்த நிலையில், வரும் வாரத்திலும் இது தொடரலாம் என்ற அச்சம் இருந்து வருகின்றது. இது 17,800 - 17,870 என்ற லெவலில் காணப்பட்டது. வரும் வாரத்தில் முக்கிய சப்போர்ட் ஆனது 17,760 ஆகவும், முக்கிய ரெசிஸ்டன்ஸ் லெவல் 18,000 ஆகவும் உள்ளது.
ரூபாய்
கடந்த வாரமே ரூபாயானது தொடர்ந்து சற்றே சரிந்த நிலையில், வரும் வாரத்திலும் இதே நிலை தொடரலாம் என்ற அச்சமும் இருந்து வருகின்றது. இது 82.30 - 82.80 ரூபாய் என்ற லெவலில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அன்னிய முதலீடு?
வரும் வாரத்தில் இந்திய சந்தையில் அன்னிய முதலீடுகள் என்பது பெரியளவில் தாக்கம் இருக்கலாம். கடந்த வாரமே 144.73 கோடி ரூபாய் செய்யப்பட்டுள்ளது. ஆக வரவிருக்கும் வாரத்தில் இந்த போக்கும் சந்தையில் மிகப்பெரிய அளவில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.
அதானி குழும பங்குகள்
கடந்த வாரத்தில் அதானி குழுமத்தின் மீதான ஹிண்டர்ன்பர்க் அறிக்கைக்கு மத்தியில், அதானி குழும பங்குகள் கடும் சரிவினைக் கண்டன. வரும் வாரத்தில் இது குறித்தான அறிவிப்புகள் வரும்பட்சத்தில் அதுவும் சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.


Click it and Unblock the Notifications