2018-19ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நாளில் இருந்து இன்று வரையில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 1,500 புள்ளிகளுக்கும் அதிகமான அளவில் சரிவை சந்தித்துள்ளது.
பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்
அருண் ஜெட்லி
இதற்கு மத்திய அரசு விதித்த LTCG வரி தான் முக்கியக் காரணம் என்று அனைவரும் பேசி வரும் நிலையில், மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி இன்றைய வர்த்தகச் சரிவிற்குப் புதிய வரி காரணமில்லை, சர்வதேச சந்தைகளின் மந்தமான நிலைதான் காரணம் என்று விளக்கம் அளித்துள்ளார்.
வரலாறு
நவம்பர் 2016க்கு பின்பு அதிக வர்த்தகச் சரிவை கடந்த வெள்ளிக்கிழமை சந்தித்தது. இந்தச் சரிவை கண்டு பல முதலீட்டாளர்கள் புதிய முதலீடுகளைச் செய்யாமல், சந்தையில் இருக்கும் முதலீட்டைக் கூட வெளியில் எடுத்து வருகின்றனர்.
இதுவே இன்றைய சரிவிற்கும் முக்கியக் காரணம்.
சர்வதேச சந்தை
இன்றைய சரிவிற்குச் சர்வதேச சந்தையும் முக்கியக் காரணமாக இருந்தாலும், புதிய வரி பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்.
சென்செக்ஸ்
இன்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 500 புள்ளிகள் வரையில் சரிந்தாலும், வர்த்தக முடிவில் 309.59 புள்ளிகள் வரையில் சரிந்து 34,757.16 புள்ளிகளை அடைந்திருந்தது.
நிஃப்டி குறியீடு
நிஃப்டி குறியீடும் இன்று காலை முதல் தொடர்ந்து சரிவில் இருந்து வர்த்தக முடிவில் 94.05 புள்ளிகள் வரையில் சரிந்து 10,666.55 புள்ளிகளை அடைந்திருந்தது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications