பிப்ரவரி மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின் மும்பை பங்குச்சந்தை தொடர்ந்து மந்தமான வர்த்தகத்தை மட்டுமே பதிவு செய்து வருகிறது. அதுவும் வங்கி மோசடிகள் வெளியான பின்பு சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு தொடர்ந்து சரிவை மட்டுமே சந்தித்து வருகிறது.
வங்கி மோசடி
பஞ்சாப் நேஷனல் வங்கியைத் தொடர்ந்து திங்கட்கிழமை வெடித்த பாங்க் ஆஃ பரோடா வங்கி மோசடி இத்துறை முதலீட்டாளர்களைச் சோகத்தின் உச்சத்தில் கொண்டு சென்றுள்ளது.
இத்தகைய சூழ்நிலையில் இன்று காலை வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தை கணிசமான வர்த்தகத்தைப் பெற்றாலும் சரிவுடனே முடிந்தது
ஐரோப்பிய சந்தை
இன்றைய வர்த்தகத்தில் ஐரோப்பிய சந்தை துவங்கிய உடன் முதலீட்டாளர்கள் பங்கு இருப்புகளை விற்றுவிட்டு வெளியேறிய காரணத்தால் சென்செக்ஸ் குறியீடு மளமளவெனச் சரிய துவங்கியது.
சென்செக்ஸ்
இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 71.07 புள்ளிகள் சரிந்து 33,703.59 புள்ளிகளை அடைந்தது. இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் 33,955 புள்ளிகள் வரையில் சென்றாலும் வங்கி பங்குகளில் ஏற்பட்ட தாக்கம் வர்த்தகத்தைத் தொடர்ந்து மந்த நிலையிலேயே வைத்திருந்ததுய
நிஃப்டி குறியீடு
செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் நிஃப்டி குறியீடு 18.00 புள்ளிகள் சரிந்து 10,360.40 புள்ளிகளை அடைந்துள்ளது.
வங்கி பங்குகள்
கடந்த ஒரு வாரத்தில் வங்கி பங்குகளில் ஏற்பட்ட சரிவில் இருந்து செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் கணிசமாக மீண்டு வந்துள்ளது.
முக்கிய நிறுவனங்கள்
இன்றைய வர்த்தகத்தில் கோல் இந்தியா, ஓஎன்ஜிசி, பார்தி ஏர்டெல், எஸ்பிஐ, டிசிஎஸ், ஹீரோ மோட்டார்ஸ் கார்ப் ஆகிய நிறுவனங்கள் அதிகளவிலான வளர்ச்சி அடைந்துள்ளது.


Click it and Unblock the Notifications