அமெரிக்காவின் முடிவு எதிர்நோக்கி மும்பை பங்குசந்தையைக் கவிழ்த்த முதலீட்டாளர்கள்..!
செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் மோடியின் வெற்றி, அன்னிய முதலீட்டாளர்களின் அதிகப்படியான முதலீடு ஆகியவை இந்திய சந்தையில் புதிய உச்சத்திற்குக் கொண்டு சென்றது.
ஆனால் இன்றைய வர்த்தகம் சரிவில் முடிந்தது தான் சோகம்.
வட்டி விகிதங்களை உயர்த்துவதற்காக அமெரிக்கப் பெடரல் வங்கியின் நாணய கொள்கை கூட்டம் 14ஆம் தேதி துவங்கிய நிலையில், புதன்கிழமை (15ஆம் தேதி) அதன் கூட்டம் முடிந்து அதன் முடிவுகளை வெளியிட உள்ளது.

புதன்கிழமை நடந்து முடிய உள்ள அமெரிக்கப் பெடரல் வங்கியின் நாணய கொள்கை கூட்டத்தில் கணிசமான அளவில் வட்டி உயர்வு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாகவே இன்று மும்பை பங்குச்சந்தை காலை வர்த்தகத் துவக்கத்தில் இருந்து மந்தமான வர்த்தகத்தைப் பதிவு செய்து வந்தது.
புதன்கிழமை வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 44.52 புள்ளிகள் குறைந்து 29,398.11 புள்ளிகளை அடைந்தது. அதேபோல் நிஃப்டி குறியீடு 2.20 புள்ளிகள் குறைந்து 9,084.80 புள்ளிகளை எட்டி இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது.


Click it and Unblock the Notifications