வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று, மும்பை பங்குச்சந்தையில் காலை வர்த்தகம் துவக்கம் முதல் நிலையான வர்த்தகத்தையும் முதலீட்டையும் பெற்று வந்த நிலையில் ஐரோப்பிய சந்தை துவங்கிய பின்பும், மே மாதத்திற்கான பணவீக்கம் தரவுகள் வெளிவரும் காரணத்தால், வர்த்தக முடிவில் அதிகளவிலான சரிவை சந்தித்தது.
இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு 250 புள்ளிகள் வரையில் உயர்ந்த சென்செக்ஸ் குறியீடு வர்த்தக முடியும் நேரத்தில் மளமளவெனச் சரிந்தது.

திங்கட்கிழமை வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 39.80 புள்ளிகள் சரிந்து 35,483.47 புள்ளிகளை அடைந்தது, அதேபோல் நிஃப்டி குறியீடு 19.30 புள்ளிகள் சரிந்து 10,786.95 புள்ளிகளை எட்டி இன்றைய வர்த்தகம் முடிவிற்கு வந்தது.
மும்பை பங்குச்சந்தையின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் இன்று பார்தி ஏர்டெல், சன் பார்மா, டாக்டர் ரெட்டி, மாருதி சுசூகி, இண்டஸ்இந்த் வங்கி ஆகியவை அதிகளவிலான உயர்வைச் சந்தித்தது.
மேலும் டாடா ஸ்டீல், பவர் கிரிட், கோல் இந்தியா, ஹீரோ மோட்டோ கார்ப் ஆகிய நிறுவனங்கள் அதிகளவிலான சரிவை சந்தித்தது.


Click it and Unblock the Notifications