மும்பை: கச்சா எண்ணெய் உற்பத்தியை ஒரு நாளுக்கு 1.2 மில்லியன் பேரல் அளவிற்கு குறைக்க OPEC அமைப்பு முடிவு செய்துள்ள நிலையில் இந்திய சந்தையில் இன்று எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயும் துறை சார்ந்த நிறுவனங்கள் அதிக லாபத்தை சந்தித்த நிலையில், வங்கி பங்குகள் லாப நோக்கில் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டது.
இதனால் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 2.30 மணிவரை உயர்வுடன் இருந்த நிலையில், வர்த்தக முடிவில் சரிவை தழுவியது.
மாதத்தின் முதல் நாளான இன்று மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 92.89 புள்ளிகள் சரிந்து 26,559.92 புள்ளிகளை அடைந்துள்ளது. அதேபோல் நிஃப்டி குறியீடு 31.60 புள்ளிகள் சரிந்து 8,192.90 புள்ளிகள் சரிந்து 8,192.90 புள்ளிகள் எட்டி வியாழக்கிழமை வர்த்தகம் முடிவடைந்தது.
மேலும் ஜியோவின் அறிமுக ஆஃபர் மூலம் டெலிகாம் நிறுவன பங்குகள் அதிகளவிலான பாதிப்பை சந்தித்துள்ளது.



Click it and Unblock the Notifications