ஐடி நிறுவனங்களின் பைபேக் திட்டங்கள் மற்றும் ஏர்டெல் நிறுவனத்தின் டெலிநார் கைப்பற்றும் திட்டத்தின் அறிவிப்புகளின் எதிரொலியாக மும்பை பங்குச்சந்சதை வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு 110 புள்ளி உயர்ந்தது.
வியாழக்கிழமை காலையில், ஐடி நிறுவனங்களின் பைபேக் திட்டங்கள் மற்றும் ஏர்டெல் நிறுவனத்தின் டெலிநார் கைப்பற்றும் திட்டத்தின் அறிவிப்புகளின் எதிரொலியாக மும்பை பங்குச்சந்சதை வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு 110 புள்ளிகள் வரை உயர்ந்தது.
இதன் பின் அமெரிக்கச் சந்தையில் வட்டி உயர்வு திட்டம், சர்வதேச சந்தையில் நிலவும் மந்தமான வர்த்தகச் சூழ்நிலைகள், மும்பை பங்குச்சந்தையின் பிப்ரவரி மாதத்திற்கான ஆர்டர் முடிவடையும் காரணத்தால் வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு மளமளவெனச் சரிந்தது.

இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு வெறும் 28.26 புள்ளிகள் மட்டுமே உயர்ந்து 28,892.97 புள்ளிகளை அடைந்துள்ளது.
சென்செக்ஸ் குறியீட்டை போலவே நிஃப்டி குறியீடும் கணிசமான அளவில் மட்டுமே உயர்ந்துள்ளது. இன்றைய வர்த்தக முடிவில் நிஃப்டி குறியீடு 12.60 புள்ளிகள் உயர்ந்து 8,939.50 புள்ளிகளை எட்டி இன்றைய வர்த்தகம் முடிவிற்கு வந்தது.


Click it and Unblock the Notifications