ஆசிய சந்தையில் சாதகமான சூழ்நிலை நிலவிய காரணத்தால் இன்று வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 165 புள்ளிகள் வரையில் உயர்ந்தது. இன்று உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நிதித்துறை மற்றும் பார்மா துறையில் அதிகளவிலான முதலீட்டைச் செய்துள்ளனர்.
செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் ரிலையன்ஸ் பவர் நிறுவனப் பங்குகளை முதலீட்டாளர்கள் அதிகளவில் விற்பனை செய்த காரணத்தால் சுமார் 12 சதவீதம் வரையிலான சரிவை சந்தித்தது. இதன் காரணமாக இத்துறை பங்குகளைக் கணிசமான சரிவை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 165.87 புள்ளிகள் உயர்ந்து 34,616.64 புள்ளிகளை அடைந்தது, இதைத் தொடர்ந்து நிஃப்டி குறியீடு 29.65 புள்ளிகள் சரிந்து 10,614.35 புள்ளிகளை அடைந்தது.
மும்பை பங்குச்சந்தையின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் ரிலையன்ஸ் மற்றும் யெஸ் வங்கி 3 சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சியை அடைந்தது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து மஹிந்திரா, அதானி போர்ட்ஸ், ஐசிஐசிஐ வங்கி, எச்டிஎப்சி, எல் அண்ட் டி ஆகியவை 1 சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சியை அடைந்தது.


Click it and Unblock the Notifications