130 புள்ளிகள் சரிவில் சென்செக்ஸ்.. இன்றைய சரிவிற்கு என்ன காரணம்..!

130 புள்ளிகள் சரிவில் சென்செக்ஸ்.. இன்றைய சரிவிற்கு என்ன காரணம்..!

சிரியா மீதான தாக்குதலுக்குப் பின் உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடான அமெரிக்கா மற்றும் ரஷ்யா நாடுகளில் மத்தியில் முதலீட்டாளர்களுக்கு முதலீட்டுக்கான குழப்பங்கள் அதிகரித்துள்ளது.

இதன் காரணமாகத் திங்கட்கிழமை வர்த்தகத் துவக்கத்தில் இந்திய பங்குச்சந்தை மந்தமான வர்த்தகத்தில் துவங்கியது.

மும்பை பங்குச்சந்தை

மும்பை பங்குச்சந்தை

வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று முதலீட்டுக்கான அதிக லாபம் அமெரிக்காவிலா மற்றும் ரஷ்யாவிலா என்ற குழப்பத்தில் முதலீட்டாளர்கள் குழம்பினர். இதன் காரணமாக ஆசிய சந்தையில் மிகவும் மோசமான வர்த்தகச் சூழ்நிலை நிலவியது.

இதனிடையில் 12 மணி வரை உயர்வு நிலையில் காணப்பட்ட சென்செக்ஸ் குறியீடு, பிப்ரவரி மாதத்திற்கான தொழிற்துறை உற்பத்தி அளவு, மார்ச் மாத்திற்கான நுகர்வோர் பணவீக்கம் ஆகியவை இன்று மாலை வெளியாகிறது.

 

சரிவில் மும்பை பங்குச்சந்தை

சரிவில் மும்பை பங்குச்சந்தை

இதன் அடிப்படையில் மதியம் 12 மணிக்குப் பின் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு மிகப்பெரிய அளவில் சரிவை சந்தித்தது.

சென்செக்ஸ் குறியீடு

சென்செக்ஸ் குறியீடு

திங்கட்கிழமை வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 130.87 புள்ளிகள் சரிந்து 29,575.74 புள்ளிகள் வரை சரிந்துள்ளது.

மேலும் மதியம் 2.45 மணி வரை வெறும் 40 புள்ளிகள் வரையிலான சரிவில் வர்த்தகம் செய்யப்பட்ட சென்செக்ஸ் குறியீடு பணவீக்கம் தொழிற்துறை உற்பத்தி அளவீடுகள் வெளிவரும் காரணத்தினால் 130 புள்ளிகள் வரை சரிந்து இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது.

 

நிஃப்டி

நிஃப்டி

சென்செக்ஸ் குறியீட்டை போலவே நிஃப்டி குறியீடும் தொடர் சரிவை சந்தித்த நிலையில், இன்று வர்த்தக முடிவில் 16.85 புள்ளிகள் சரிந்து 9,181.45 புள்ளிகளை அடைந்தது.

டாப் 30 நிறுவனங்கள்

டாப் 30 நிறுவனங்கள்

மும்பை பங்குச்சந்தையின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் இன்று இன்போசிஸ், விப்ரோ, ஏசியன் பெயின்ட்ஸ், ரிலையன்ஸ், எச்டிஎப்சி, டாக்டர் ரெட்டி ஆகிய நிறுவனங்கள் அதிகளவிலான சரிவை சந்தித்தது.

அதேபோல் டாடா மோட்டார்ஸ், ஆக்சிஸ் வங்கி, கோல் இந்தியா, அதானி போர்ட்ஸ், டாடா ஸ்டீல், லூபின் ஆகிய நிறுவனங்கள் உயர்வை சந்தித்தது.

 

சர்வதேச சந்தை

சர்வதேச சந்தை

திங்கட்கிழமை வர்த்தகத்தில் ஆசிய சந்தையில் இந்திய சந்தை உட்படச் சீனா, ஹாங்காங் சந்தைகளும் சரிவை சந்தித்த நிலையில், தைவான், ஜப்பான், ஆஸ்திரியா ஆகிய சந்தைகள் கணிசமான உயர்வைச் சந்தித்தது.

ஐரோப்பிய சந்தை

ஐரோப்பிய சந்தை

மேலும் ஐரோப்பிய சந்தையில் இங்கிலாந்து, ஐரோப்பா, பிரான்ஸ், ஜெர்மனி, சுவிஸ் ஆகிய அனைத்தும் சரிவில் தத்தளித்து வருகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+