பட்ஜெட் 2017 எதிரொலி, ரிசர்வ் வங்கியின் இருமாத நாணய கொள்கை கூட்டம் ஆகியவற்றின் காரணமாக இந்திய சந்தையில் அன்னிய முதலீடு மற்றும் உள்நாட்டு முதலீடுகள் கடந்த 1 வாரமாகத் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில்,
பட்ஜெட் 2017 எதிரொலி, ரிசர்வ் வங்கியின் இருமாத நாணய கொள்கை கூட்டம் ஆகியவற்றின் காரணமாக இந்திய சந்தையில் அன்னிய முதலீடு மற்றும் உள்நாட்டு முதலீடுகள் கடந்த 1 வாரமாகத் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், இன்று 4 மாத சரிவில் இருந்து சரிந்துள்ளது.

டிசம்பர் மாதத்தில் நாட்டின் பணவீக்கம் 2 வருடச் சரிவை எட்டியுள்ள காரணத்தினால் ரிசர்வ் வங்கி நாளை நடக்கும் நாணய கொள்கை கூட்டத்தில் 0.25 சதவீத வட்டியைக் குறைக்கும் என எதிர்பார்த்த நிலையில், பல தரப்பு வங்கி ஆய்வாளர்கள் வட்டி குறைப்பு ஏப்ரல் மாதம் வரை ஒத்திவைக்கலாம் எனத் தெரிவித்துள்ளனர்.
இதனால் நாளை ரிசர்வ் வங்கி நடத்து இருமாத நாணய கொள்கை கூட்டத்தில் எவ்விதமான வட்டிக் குறைப்பும் இருக்காது எனத் தெரிகிறது.
இதன் காரணமாக இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 104.12 புள்ளிகள் சரிந்து 28,335.16 புள்ளிகளை அடைந்துள்ளது. அதேபோல் நிஃப்டி குறியீடு 32.75 புள்ளிகள் சரிந்து 8,768.30 புள்ளிகளை எட்டி இன்றைய வர்த்தகம் முடிவடைந்துள்ளது.


Click it and Unblock the Notifications