செபி உத்தரவால் சரிந்த மும்பை பங்குச்சந்தை..!

இந்திய பங்குச்சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான செபி செவ்வாய்க்கிழமை முறையற்ற வகையில் வெளிநாடுகளில் இருந்து பணம் முதலீடு, வரி ஏய்ப்பு, முறைகேடான செயல்களில் ஈடுப்பட்டிருக்க கூடும் என சந்தேகத்துடன் சுமார் 162 நிறுவனங்கள் மீதான வர்த்தகத்திற்கு தடை விதித்துள்ளது.

இதன் காரணமாக இன்று மும்பை பங்குச்சந்தை காலை வர்த்தகம் துவக்கம் முதலே மந்தமான வர்த்தகத்தை மட்டுமே பெற்றது.

எண்ணெய் மற்றும் வங்கி நிறுவனங்கள்

எண்ணெய் மற்றும் வங்கி நிறுவனங்கள்

இதனை தொடர்ந்து இன்று பங்குச்சந்தை வர்த்தகத்தில் முதலீட்டாளர்கள் எண்ணெய் மற்றும் வங்கி நிறுவன பங்குகளை அதிகளவில் விற்பனை செய்த காரணத்தால், மும்பை பங்குச்சந்தை தொடர்ந்து முதலீட்டு அளவை இழந்து வந்தது.

மும்பை பங்குச்சந்தை

மும்பை பங்குச்சந்தை

செவ்வாய்கிழமை வர்த்தக துவக்கத்தில் சில நிமிடங்கள் மட்டுமே லாபகரமான நிலையில், செபி அறிவிப்பை தொடர்ந்து சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி மளமளவென சரிந்தது.

சென்செக்ஸ் குறியீடு

சென்செக்ஸ் குறியீடு

இன்றைய வர்த்தக முடிவில் 2வது நாளாக தொடர் சரிவில் சென்செக்ஸ் குறியீடு 259.48 புள்ளிகள் சரிந்து 32,014.19 புள்ளிகள் வரை சரிந்தது.

அதிகப்படியாக இன்று வர்த்தகத்தில் சென்செக்ஸ் 330 புள்ளிகள் வரை சரிந்தது குறிப்பிடத்தக்கது.

 

நிஃப்டி குறியீடு

நிஃப்டி குறியீடு

சென்செக்ஸ் குறியீட்டை போல் மளமளவென சரிந்த நிஃப்டி குறியீடு வர்த்தக முடிவில் 78.85 புள்ளிகள் சரிந்து 9,978.55 புள்ளிகள் அடைந்தது நிஃப்டி குறியீடு.

அதிக நஷ்டமடைந்த நிறுவனங்கள்

அதிக நஷ்டமடைந்த நிறுவனங்கள்

இன்றைய வர்த்தகத்தில் டாக்டர் ரெட்டி, கோல் இந்தியா, எஸ்பிஐ, ஐடிசி, ஐசிஐசிஐ வங்கி, என்டிபிசி, ஆக்சிஸ் வங்கிகள் அதிகளவிலான சரிவை சந்தித்தது.

லாபமடைந்த நிறுவனங்கள்

லாபமடைந்த நிறுவனங்கள்

சென்செக்ஸ் குறியீட்டின் எஸ் அண்ட் பி குறியீடின் கீழ் இருக்கும் டாப் நிறுவனங்களில் இன்று டாடா ஸ்டீல், சிப்லா, பஜாஜ் ஆட்டோ, பார்தி ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள் லாபம் அடைந்தது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+