கர்நாடக மாநில தேர்தலில் பிஜேபி கட்சியின் தோல்வி, ஆட்சியைப் பிடிக்க நடந்த கூத்து ஆகியவற்றை இந்தியா முழுவதும் மக்கள் பார்த்த நிலையில், 2019ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலிலும் இதே நிலை தான் இருக்கும் எனக் கணிப்புகள் வெளியாகியுள்ளது.
இதன் எதிரொலியின் காரணமாக இன்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் காலை வர்த்தகம் துவங்கும் முதல் தொடர் சரிவைச் சந்தித்தது.
பெட்ரோல், டீசல்
மத்திய அரசு நாட்டின் வளர்ச்சி, பொருளாதார, மக்கள் நலன் சார்ந்த பணிகளைச் செய்யாமல் கர்நாடகாவில் ஆட்சி அமைக்கத் தலைகீழாக நின்று முயற்சி செய்து தோற்றுப்போனது. கர்நாடக மாநில தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே கிட்டத்தட்ட 15 நாட்களாகப் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தாமல் தற்போது தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
வர்த்தகம் மற்றும் நிதிப் பற்றாக்குறை
இதனால் நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறை மற்றும் நிதிப் பற்றாக்குறை பெரிய அளவில் பாதிப்பதும் மட்டும் அல்லாமல் அன்னிய முதலீட்டாளர்கள் மற்றும் அன்னிய நிறுவன முதலீட்டாளர்களுக்கு முதலீடு செய்ய இது பெரிய அளவில் தடையாக இருக்கிறது.
மும்பை பங்குச்சந்தை
இதன் வாயிலாக இன்று காலை மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 232.17 புள்ளிகள் சரிந்து, 34,616.13 புள்ளிகளை அடைந்தது. இதேபோல் நிஃப்டி குறியீடு 79.70 புள்ளிகள் சரிந்து 10,516.70 புள்ளிகளை எட்டி இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது.
முக்கிய நிறுவனங்கள்
இன்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் எஸ்பிஐ 2.47 சதவீதமும், டிசிஎஸ், கோல் இந்தியா, ஐசிஐசிஐ வங்கி ஆகியவை 1 சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சியையும் அடைந்துள்ளது.
மேலும் சன் பார்மா, டாக்டர் ரெட்டி ஆகிய நிறுவனங்கள் 4 சதவீதத்திற்கும் அதிகமான சரிவும், யெஸ் வங்கி 3.27 சதவீதமும், எச்டிஎப்சி, பஜாஜ் ஆட்டோ, டாடா ஸ்டீல், ஹீரோமோட்டோ கார்ப், டாடா மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்கள் 2 சதவீதத்திற்கும் அதிகமான சரிவை அடைந்துள்ளது.
4 வருட ஆட்சி
இதன் மூலம் கடந்த 4 வருடங்களில் மோடி ஆட்சியில் நாட்டின் பொருளாதாரம், மக்களின் வாழ்வியல் ஆகியவை மோசமடைந்தது தவிர, வளர்ச்சி அடையவில்லை. இவை அனைத்தும் தற்போது பங்குச்சந்தை முதலீட்டாளர்களை மத்தியில் குழப்பமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.
More From GoodReturns

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?



Click it and Unblock the Notifications