சர்வதேச தரகு நிறுவனமான மார்கன் ஸ்டான்லி இந்தியாவின் பெஞ்ச்மார்க் குறியீடான சென்செக்ஸ் டிசம்பர் 2023ல் 68,500 புள்ளிகளை எட்டலாம் என கணித்துள்ளது.
இது இன்று 60,682 என்ற லெவலில் காணப்படும் நிலையில், இது இந்த லெவலில் இருந்து 12% அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மார்கன் ஸ்டான்லி வளர்ந்து வரும் சந்தையில் ஏற்பட்ட மீட்சியின் மத்தியில், இந்தியாவின் வருமானம் அழுத்தத்தில் காணப்பட்டது. எனினும் பங்கு சந்தையானது கடந்த ஆண்டு சற்றே வருமானம் கொடுத்தது.
வளர்ச்சி அதிகரிக்கலாம்
அடிப்படையில் வெளிநாட்டு நிறுவனங்கள், தொடர்ந்து அதிகமாக உள்ள கமாடிட்டிகளின் விலை, குறிப்பாக எண்ணெய் மற்றும் உரங்கள் விலைக்கு மத்தியில், நாட்டின் வளர்ச்சியில் பெரியளவில் மாற்றம் இல்லை.
இதே அமெரிக்கா ரெசசனுக்குள்ளும் நுழையவிலை. இதற்கிடையில் ஆர்பிஐ வட்டி விகிதத்தினை 6.5% ஆக வைத்துள்ளது. வலுவான உள்கட்டமைப்பு செலவுகள் மூலம் அரசாங்க கொள்கையும் ஆதரவாக உள்ளது. இதுவும் வளர்ச்சியும் அதிகரிக்கலாம்.
சென்செக்ஸ் இலக்கு?
மார்கன் ஸ்டான்லி இந்த ஆண்டின் இறுதியில் சென்செக்ஸ் 80,000 புள்ளிகளை எட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு வேளை சந்தை சரிவினைக் கண்டால் 52,000 புள்ளிகளை எட்டலாம் என நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர்.
சீனா, கொரியா மற்றும் தைவான் போன்ற சில பெரிய வளர்ந்து வரும் சந்தைகளுக்கான நிலைமைகளை மேம்படுத்தி வருவதன் மூலம், வளர்ந்து வரும் சந்தையில் இந்தியாவை நாங்கள் எடை குறைவாக வைத்துள்ளோம்.
இந்தியா பலனடையலாம்
கடந்த ஆண்டினை காட்டிலும் நடப்பு ஆண்டில் இருந்து இந்தியா பலனடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய சந்தையில் நிலவி வரும் அழுத்தமானது இன்னும் சில வாரங்களுக்கு தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இந்தியாவின் அடிப்படை வளர்ச்சி ஆதாரங்கள் வலுவாக உள்ளன.
சென்செக்ஸ் நிலவரம் எப்படி?
2022ல் இந்திய சந்தையில் 4% ஆக லாபம் அதிகரித்துள்ள நிலையில், இதே சென்செக்ஸ் நடப்பு ஆண்டில் இதுவரையில் பெரியளவில் மாற்றம் காணவில்லை. இதே இன்டெக்ஸ் பிப்ரவரி 10, 2023ல் இருந்து 60,682.70 புள்ளிகளாக இருந்தது. இது கடந்த டிசம்பர் 30, 2022ல் 60,840.74 புள்ளிகளாக இருந்தது.
சந்தையில் தாக்கம் இருக்கலாம்
மார்கன் ஸ்டான்லி கூறுகையில், 2022ம் ஆண்டில் இந்தியாவின் சிறந்த செயல்திறனின் தலைமையில் அரசாங்க கொள்கை இருந்தது. உள்கட்டமைப்பு துறையில் முதலீடு அதிகரிப்பு, அன்னிய முதலீடு அதிகரிப்பு என பலவும் சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.
மீடியம் டெர்மில் எப்படி?
இதற்கிடையில் இன்று இந்திய பங்கு சந்தையானது சர்வதேச சந்தையில் ஏற்பட்ட தாக்கம், ரெசசன் அச்சம், அமெரிக்காவின் பணவீக்க தரவு, என பலவும் வரவிருக்கும் வாரத்தில் சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். இதற்கிடையில் அன்னிய முதலீடுகளும் சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். இந்தியாவை பொறுத்த வரையில் இந்திய சந்தையில் முதலீடுகள் வரத்து, காலாண்டு முடிவுகள் என பலவும் மீடியம் டெர்ம் சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.
அடுத்த வாரம்?
சந்தை பலவீனமாக இருக்கும் இந்த சமயத்தில் இந்திய சந்தையில் அன்னிய முதலீடுகள் வரத்து என்பது அதிகமாக இருக்கும். இது சந்தையில் ஒரு வலுவான நிலையை ஏற்படுத்தலாம். மேற்கோண்டு காலாண்டு முடிவுகளும் சந்தையில் பிரதிபலிக்கலாம். பல மிட் கேப் மற்றும் ஸ்மால்கேப் பங்குகள் ஏமாற்றம் அளிக்கின்றன. எனினும் இனி வரவிருக்கும் நாட்களில் இதிலும் மாற்றம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!



Click it and Unblock the Notifications