வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் சென்செக்ஸ் காலையில் இருந்து அதிகளவிலான தடுமாற்றத்தை எதிர்கொண்டாலும் பல நேரம் நேற்றைய வர்த்தகத்தை காட்டிலும் உயர்வுடன் காணப்பட்டது.
ஆனால் ஐரோப்பிய சந்தை துவக்கத்தின் போது சென்செக்ஸ் தொடர் வீழ்ச்சியை எதிர்கொண்டது.
இதனால் இன்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 398.18 புள்ளிகள் சரிந்து 57,527.10 புள்ளிகளுக்கு வீழ்ந்தது. வியாழக்கிழமை வர்த்தக முடிவில் 57,925.48 புள்ளிகளை எட்டியுள்ளது, இன்று அதிகப்படியாக 57,422.98 புள்ளிகளை எட்டியுள்ளது.
நிஃப்டி குறியீடு 131.85 புள்ளிகள் சரிந்து 16,945.05 புள்ளிகளை எட்டியுள்ளது.
சென்செக்ஸ் குறியீடு
சென்செக்ஸ் குறியீட்டின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் கோட்டாக் மஹிந்திரா வங்கி, இன்போசிஸ், பவர் கிரிட், டெக் மஹிந்திரா, ஏசியன் பெயின்ட்ஸ் ஆகியவை 1 சதவீதத்திற்கும் குறைவான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. முக்கியமாக விப்ரோ வியாழக்கிழமை வர்த்தகத்தில் 52 வார சரிவை பதிவு செய்த நிலையில் இன்று எவ்விதமான மாற்றமும் இல்லாமல் 361.55 ரூபாய் அளவுக்கு முடிந்துள்ளது.
முக்கிய நிறுவனங்கள் சரிவு
இன்றைய வர்த்தகத்தில் பஜாஜ் பைனான்ஸ், பஜாஜ் பின்சர்வ் ஆகியவை 3 சதவீதத்திற்கு மேல் சரிந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல் என்டிபிசி, மஹ்ந்திரா அண்ட் மஹிந்திரா, ஹெச்சிஎல் டெக், எஸ்பிஐ, எல் அண்ட் டி, ரிலையன்ஸ், டாடா ஸ்டீல் ஆகியவை 1 சதவீதத்திற்கு மேல் சரிந்துள்ளது. குறிப்பாக டாடா ஸ்டீல் 2.58 சதவீதம் சரிந்துள்ளது.
சர்வதேச சந்தை பாதிப்பு
சர்வதேச சந்தை பாதிப்பின் காரணமாகவும் ஐரோப்பிய சந்தையில் டச்சஸ் வங்கியின் பங்குகளின் வீழ்ச்சி காரணமாகவும் பெரும் பாதிப்பை ஆசிய பங்குச்சந்தை எதிர்கொண்டு உள்ளது. இதன் மூலம் இந்திய பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் இன்று 3 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சந்தை மதிப்பை இழந்துள்ளனர்.
ஐரோப்பிய சந்தை
இன்று ஐரோப்பிய சந்தையில் அனைத்து முன்னணி வர்த்தக சந்தைகளும் கடுமையான சரிவை பதிவு செய்துள்ளது. இதன் வாயிலாக தான் இன்று வர்த்தக முடியும் நேரத்தில் சென்செக்ஸ் 400 புள்ளிகள் வரையில் சரிந்துள்ளது.


Click it and Unblock the Notifications