300 புள்ளிகள் சரிவில் சென்செக்ஸ்..!
இந்திய சந்தையில் ஏற்பட்டுள்ள சரிவுகளைச் சமாளிக்க முதலீட்டுப் பத்திரங்கள் வெளியீடு அதிகரித்துள்ளது, இதனால் பத்திர முதலீடு மீதான லாபம் அதிகளவில் குறைந்துள்ளதால், வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் அதிகளவிலான முதலீடு குறைந்தது.
இதனுடன் அமெரிக்காவில் இன்று வேலைவாய்ப்புக்கான தரவுகள் வெளியிட உள்ளதால் இன்று ஆசிய சந்தையில் மிகவும் குறைவான வர்த்தகம் பதவானது.

இதன் எதிரொலியாக மும்பை பங்குச்சந்தையில் இன்று காலை வர்த்தகம் துவங்கும் முதலே குறைவான வர்த்தகத்தைப் பெற்றது.
வாரத்தின் இறுதி நாளான இன்று மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் குறியீடு 329.26 புள்ளிகள் சரிந்து 26,230.66 புள்ளிகளை அடைந்தது, அதேபோல் நிஃப்டி குறியீடு 106.10 புள்ளிகள் குறைந்து 8,086.80 புள்ளிகளை அடைந்து இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது.


Click it and Unblock the Notifications