இந்திய பங்கு சந்தையானது மூன்றாவது வாரமாக தொடர்ந்து சரிவினைக் கண்டு முடிவடைந்துள்ளது. இது குறிப்பாக அரசு எஸ்டிடி (STT) கட்டணத்தினை அதிகரிதுள்ள நிலையில், இது முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக சர்வதேச வங்கித் துறையில் நிலவி வரும் நெருக்கடி என பல காரணிகளுக்கு மத்தியில், சந்தையானது மூன்றாவது வாரமாக இன்றும் சரிவில் முடிவடைந்துள்ளது.
குறிப்பாக வார கடைசி வர்த்தக நாளான இன்று சரிவில் தொடங்கி, சரிவிலேயே முடிவடைந்துள்ளது. நிஃப்டி 17,000 புள்ளிகளாக முடிவடைந்துள்ளது.
இன்றைய வர்த்தக நிலவரம்?
சென்செக்ஸ் 398.18 புள்ளிகள் அல்லது 0.69% சரிவினைக் கண்டு, 57,527.10 புள்ளிகளாகவும், நிஃப்டி 131.90 புள்ளிகள் அல்லது 0.77% சரிவினைக் கண்டு, 16,945 புள்ளிகளாகவே முடிவடைந்துள்ளது. இதற்கிடையில் 1030 பங்குகள் ஏற்றத்திலும், 2381 பங்குகள் சரிவிலும், இதே 130 பங்குகள் மாற்றமில்லாமலும் முடிவடைந்துள்ளது.
ரூபாயின் மதிப்பு
இதற்கிடையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது 22 பைசா குறைந்து, 82.48 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இது கடந்த அமர்வில் 82.26 ரூபாயாக முடிவடைந்திருந்தது. இது வரவிருக்கும் வாரத்திலும் 82 - 83 ரூபாய்க்குள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறியீடுகள் நிலவரம்?
இன்றைய சந்தை அமர்வில் அனைத்து குறியீடுகளும் சரிவில் முடிவடைந்துள்ளது. இதில் பிஎஸ்இ ஸ்மால்கேப், பிஎஸ்இ மிட் கேப், பிஎஸ்இ கேபிட்டல் குட்ஸ், பிஎஸ்இ கன்சியூமர் டியூரபிள் குட்ஸ், பிஎஸ்இ ஆயில் & கேஸ், நிஃப்டி பிஎஸ்இ உள்ளிட்ட குறியீடுகள் 1% மேலாக சரிவில் முடிவடைந்துள்ளன. மற்ற குறியீடுகள் 1% கீழாக முடிவடைந்துள்ளது.
நிஃப்டி குறியீடு?
நிஃப்டி குறியீட்டில் உள்ள சிப்லா, கோடக் மஹிந்திரா, இன்போசிஸ், டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டீஸ், அப்பல்லோ ஹாஸ்பிட்டல் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், பஜாஜ் பின்செர்வ், பஜாஜ் பைனான்ஸ், அதானி எண்டர்பிரைசஸ், டாடா ஸ்டீல், ஹிண்டால்கோ உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் முடிவடைந்துள்ளது.
சென்செக்ஸ் குறியீடு
சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள கோடக் மஹிந்திரா, இன்போசிஸ், பவர் கிரிட் கார்ப், டெக் மஹிந்திரா, ஏசியன் பெயிண்ட்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், பஜாஜ் பின்செர்வ், பஜாஜ் பைனான்ஸ், டாடா ஸ்டீல், ரிலையன்ஸ், லார்சன் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் முடிவடைந்துள்ளது.
முக்கிய காரணிகள்
தொடர்ந்து ரூபாயின் மதிப்பு சரிவினைக் கண்டு வரும் நிலையில், டாலரின் மதிப்பும் சரிவினைக் கண்டு வருகின்றது. இதற்கிடையில் இது அன்னிய முதலீடுகள் வெளியேற்றத்திற்கு வழிவகுத்துள்ளது. இதற்கிடையில் தான் இந்திய சந்தைகள் சரிவினைக் கண்டுள்ளது. இது தவிர பல்வேறு முக்கிய தரவுகள், ரஷ்யா உக்ரைன் பிரச்சனை, அரசியல் பதற்றங்கள், வங்கி நெருக்கடிகள் என பலவும் சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications