மும்பை: இந்திய பங்குச் சந்தை வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் கடும் சரிவு ஏற்பட்டது. முக்கிய பங்குச்சந்தை குறியீடுகளான நிஃப்டி 50 மற்றும் சென்செக்ஸ் ஆகியவை சுமார் 1 சதவீதம் சரிவைச் சந்தித்தன. வியாழக்கிழமை வர்த்தகத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி வரலாற்று உச்சத்தைத் தொட்ட வேளையில் இன்று பெரும் சரிவைச் சந்தித்துள்ளது. இன்றைய வர்த்தக சரிவின் மூலம் இந்தியப் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் பெரும் இழப்பைச் சந்தித்துள்ளது மும்பை பங்குச்சந்தையின் மொத்த சந்தை மதிப்பீட்டின் அடிப்படையில் தெரிய வந்துள்ளது.
பிரதமர் மோடி தலைமையிலான அரசு அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ள நிலையில் ற்கு முன்னதாக, லாபத்தைப் பதிவு செய்ய உள்ள நிலையில் இந்தியப் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் அனைத்து துறைகளிலும் பங்குகளை விற்பனை செய்து அதிர்ச்சி கொடுத்துள்ளனர். இதேபோல் மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் பிரிவுகளில் இன்னும் அதிகமான சரிவு காணப்பட்டது.இன்றைய சரிவுக்கு மந்தமான சர்வதேச வர்த்தகமும் முக்கிய காரணமாகும்.

இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 738.81 புள்ளிகள் சரிந்து 80,604.65 புள்ளிகளை எட்டியுள்ளது. மேலும் சென்செக்ஸ் குறியீட்டின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் இன்போசிஸ், ஐடிசி, ஏசியன் பெயின்ட்ஸ், ஹெச்சிஎல் டெக் தவிர அனைத்து பங்குகளும் சரிவில் உள்ளது. இதில் முக்கியமாக டாடா ஸ்டீல் 5.17 சதவீதம் வரையில் சரிந்துள்ளது, இதை தொடர்ந்து JSW ஸ்டீல் 4.36 சதவீதம் சரிந்துள்ளது. இதை தொடர்ந்து BSE மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகள் தலா 2 சதவீதத்திற்கும் அதிகமாகச் சரிந்துள்ளன.
இதன் மூலம் மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட அனைத்து நிறுவனங்களின் சந்தை மதிப்பு நேற்றைய வர்த்தகத்தில் சுமார் 454.3 லட்சம் கோடி ரூபாயாக இருந்த நிலையில் தற்போது 446.3 லட்சம் கோடி ரூபாயாகச் சரிந்ததுள்ளது. இதன் காரணமாக, ஒரே நாளில் இந்தியப் பங்குச்சந்தையில் முதலீட்டாளர்கள் சுமார் 8 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக இழப்பைச் சந்தித்தனர்.
இந்த சரிவு, பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நேரத்தில் ஏற்படும் இயல்பான சரிவாகப் பார்க்கப்படுகிறது. பொதுவாக பட்ஜெட் அறிவிக்கும் முன்பு பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் தங்களது பங்கு முதலீட்டில் இருந்து லாபம் பார்க்கும் விதமாக, உயர்மட்டத்தை எட்டிய பங்குகள், குறைவான லாபத்தை தரும் பங்குகளை விற்பனை செய்து லாபத்தை பார்ப்பது வழக்கம்.
இப்படி தான் இன்றும் பங்குச்சந்தையில் காலை வர்த்தகம் துவங்கும்போதே சரிவுடன் துவங்கியது, ஆனால் இந்த சரிவுக்குப் பின்பு பலவீனமான உலகளாவிய வர்த்தகமும் முக்கியமாகக் காரணமாக இருந்த காரணத்தால் கூடுதல் பாதிப்பு ஏற்பட்டு சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு 1 சதவீதம் வரையில் சரிந்தது.
அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை பட்ஜெட் அறிவிப்பு எவ்வாறு இருக்கும் என்பதைப் பொறுத்து, சந்தையின் போக்கு தீர்மானிக்கப்படும். முதலீட்டாளர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம், குறிப்பாக லாபம் ஈட்டுவதற்கான சந்தர்ப்பங்களைக் கவனித்துக்கொள்வதும், சந்தை நிலவரத்தைத் தொடர்ந்து கண்காணிப்பதும் அவசியம்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications