ஆசிய மற்றும் அமெரிக்கச் சந்தையில் முதலீட்டாளர்கள் செய்த கலவையான வர்த்தகத்தினால் சென்செக்ஸ் மற்றும் நிப்டியும் தொடர்ந்து இரண்டாவது நாளாக உயர்ந்துள்ளது.
பருவ காலப் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையினை மத்திய அரசு அளிக்க அனுமதி அளித்த பிறகு இந்திய ரூபாய் மதிப்பு மற்றும் பத்திர திட்டங்களின் மதிப்பில் சிறிய மாற்றம் ஏற்பட்டது. சீனா- அமெரிக்கா இடையில் உள்ள வர்த்தகப் போர் பதற்றத்தினால் சீன நாணய மதிப்பானது 11 மாத சரிவினை சந்தித்துள்ளது.
இன்றைய சந்தை நிலவரம்
சந்தை நேர முடிவில் இந்திய பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் 266.80 புள்ளிகள் என 0.75 சதவீதம் உயர்ந்து 35,645.40 புள்ளிகளாகவும், தேசிய பங்கு சந்தை குறியீடான நிப்டி 70 புள்ளிகள் என 0.65 சதவீதம் உயர்ந்து 10,769.90 புள்ளிகளாகவும் வர்த்தகம் செய்யப்பட்டது.
துறை வாரியான நிலவரம்
மும்பை பங்கு சந்தையினைப் பொறுத்தவரையில் ஆட்டோமொபைல், ஆற்றல், ஹெல்த்கேர், நிதி மற்றும் வங்கி துறை பங்குகள் லாபத்தினை அளித்துள்ளன. அதே நேரம் ஐடி, டெக், மின்சாரம் மற்றும் நுகர்வர் சாதன நிறுவனப் பங்குகள் நட்டத்தினை அளித்துள்ளன.
லாபம் ஈட்டிய பங்குகள்
பஜாஜ் ஆட்டோ, மாருதி, இந்துஸ்தான் யூனிலீவர், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் எச்டிஎப்சி பங்குகள் லாபம் அளித்துள்ளன.
நட்டம் அளித்த பங்குகள்
எண்டிபிசி, வேதாந்தா, ஓஎன்ஜிசி, டாடா மோட்டார்ஸ், பாரத் பெட்ரோலியம், சிப்லா பங்குகள் நட்டத்தினை அளித்துள்ளன.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications