5வது நாளாக மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்று அதிகளவிலான வர்த்தகத்தைப் பெற்று முதலீட்டாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
வியாழக்கிழமை வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் ஐடி மற்றும் வங்கித்துறை பங்குகளின் மீதான அதிக முதலீட்டின் காரணமாகச் சென்செக்ஸ் குறியீடு 210 புள்ளிகள் வரையில் உயர்ந்தது.
அமெரிக்கா
அமெரிக்கா மீண்டும் சிரியாவை தாக்கும் முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் சர்வதேச சந்தையில் இன்று வர்த்தகம் மந்தமாகவே இருந்தது.
பணவீக்கம்
மேலும் இன்று மாலை பணவீக்கம் மற்றம் தொழிற்துறை உற்பத்தி தரவுகள் இன்று மாலை வருவதால் முதலீட்டாளர்கள் வழக்கமான அளவை விடவும் சற்று கூடுதலான முதலீட்டைச் செய்தனர்.
சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி
இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 160.69 புள்ளிகள் உயர்ந்து 34,101.13 புள்ளிகளை அடைந்தது. இதேபோல நிஃப்டி குறியீடு 41.50 புள்ளிகள் உயர்ந்து 10,458.65 புள்ளிகளை அடைந்தது.
முக்கிய நிறுவனங்கள்
வியாழக்கிழமை வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் டிசிஎஸ், இன்போசிஸ், ஆக்சிஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, டாடா மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்கள் அதிகளவிலான வளர்ச்சியை அடைந்தது.


Click it and Unblock the Notifications